பக்கம்:புத்த ஞாயிறு.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மணியகாரர் : அப்படியென்ருல்...?

மணவாளன் : ஆம்! மறுபடி அங்கே போய் இளவரசிக்குச் சங்கீதம் கற்பிக்கிற உத்தேசம் எனக்குச் சிறிதும் இல்லை இந்தப் பெண் கோதை காட்டுக்கு மூங்கில் வெட்டி வரப் போன இடத்தில் தந்தையைச் சாவுக்குப் பறி. கொடுத்து விட்டாள். அந்தப் பெரியவரை இப்போது தான் மயானத்தில் எரித்துவிட்டு வந்து இங்கே நிற்கிருேம். நீரோ வாயில் தோன்றுகிற சொற்களை வரம் பின்றிப் பேசுகிறிரே! உங்கள் பாளையத்து இளவரசியை விட இவளுக்கு இசை கற்பிப்பதை நான் அதிகமாக விரும்புவேன். என் விருப்பத்துக்கு எதிரே எனக்கு, வேறெவரும் இலட்சியமே இல்லை. தெரிந்து கொள்ளும்.

கோதை . (மணவாளனின் காதருகே) என் பொருட்டு உங்களைக் குறைத்துக் கொள்கிறீர்களே, கண்ணு! நான் எந்த விதத்தில் உங்களுக்குச் சமமானவள்? உலகத்தார் சாதாரணமாக எடைபோடும் கழைக் கூத்தாடி இனத். தைச் சேர்ந்தவள்தானே நான்?

மணவாளன் : அப்படிச் சொல்லாதே கோதை! உன்னைப் படைத்த படைப்புக் கடவுளே என்னெதிரில் வந்து நின்று, நீ குறைவான குலத்தைச் சேர்ந்தவள் என்று. இழிவு கூறினாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட் டேன். என் மனத்தில் நான் முடிவு செய்வதுதான் என்னுடைய தீர்மானம். அதற்கு அப்பால் அதை முடிவு செய்யும் உரிமை வேறு யாருக்கும் இல்லே. இந்த மணியக்காரர் உட்பட... . .

காட்சி-6 [மணவாளன் எடுத்தெறிந்து பேசிய பேச்சுக்கு மறு: நாளே விளைவு இருந்தது. மணவாளனே கோதையோ அப்படி எதிர் பார்க்காவிட்டாலும், மணியக்காரர். மூட்டிவிட்ட கனல் அரசனிடம் தன் வேலையைக்