பக்கம்:புத்த ஞாயிறு.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#4 கோதையின் காதல்

அவையெல்லாம் உங்களுக்குச் சுலபமாகக் கிடைத்

திருக்கும். மணவாளன் : ஏன் கிடைக்கவில்லையோ?

மோகனவல்லி : ஏ:ை அது உங்களுக்கே -- தெரியுமே! எவளோ ஒரு நாடோடிக் கழைக் கூத்தியிடம் மயங்கி நீங்கள் அரண்மனையைக் கேவலப்படுத்தினர்கள்.

மணவாளன் : யார் நாடோடி? கோதை என் காவிய நாயகி. அவளைப்பற்றிக் கேவலமாகப் பேசுகிறவர்கள் எந்தப் பாளையத்தை ஆள்கிறவர்களானலும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். எங்களுக்கு நாட்டில் வாழும் உரிமை வேண்டாம். உலகம் உயர்த்துகிற புகழ் வேண்டாம். நாங்கள் மண்ணுலகத்து மனிதர்களைப் பார்த்துப் பழகி எங்கள் கலேகளுக்குப் பரம்பரையும், தேடவேண்டாம். ஆனல் நாங்கள் பிறவி பிறவியாகச் சேர்ந்தே வாழ்வோம். எங்களை எவராலும் பிரிக்க முடியாது. நாங்கள் அழிவற்ற நித்தியமான அன்பை ஆளுகின்றவர்கள். அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மோகனவல்வி : அப்படியால்ை உங்களுக்கு இந்தக் காட் டைத் தவிர வேறு கதியில்லை கவிஞரே! நீங்கள் மட்டும் தனியாகப் புறப்பட்டு வருகிறதாயிருந்தால், நாச்சியார் புரம் பாளையத்தின் பல்லாயிரம் மக்களும் உங்களைப் புகழ்ந்து போற்றித் தலைவணங்க எப்போதும் காத்தி ருப்பார்கள். மேற்குப் பக்கமும், வடக்கும் தெற்கும் பயங்கரமான வனமும் மலைத்தொடர்களும்தான் இருக் கின்றன. அந்த மலைத்தொடர்கள் முடியுமிடத்தில் கடல் தொடங்கிவிடுகிறது. கிழக்குப் பக்கமாக நீங்கள் உலகத்து வாழ்க்கையில் புகுந்து கலக்கவிரும்பினலோ நாச்சியார்புரம் பாளையத்தில் நுழையாமல் அது முடியவே முடியாது. எனவே உங்கள் நிலையை நீங்கள்

இப்போது தீர யோசிக்க வேண்டும்.