பக்கம்:புத்த ஞாயிறு.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


: 86 கோதையின் காதல்

மனிதர்க்ளாக இருந்த காலத்திலும் தேவர்களாக வாழ்ந்து பெருமை பெற்றிர்கள். உங்களை நெருங்கவும் எனக்கு யோக்யதை இல்லை. ஆளுல் உங்கள் அருகில் இருந்து உங்களைத் தொழுது வணங்கிக் கொண்டே இருக்கும் உரிமையையாவது எனக்கு அளியுங்கள்... என்னையும் உங்களோடு தேவர்களாகக் சேர்த்துக் கொள்ளுங்கள்... - - (கதறிக்கொண்டே, யாரும் எதிர்பார்க்காதபோது தானும் திடுமென அந்த முதலை மடுவில் பாய்ந்து விடு கிருள் மோகனவல்லி.) -

காரியஸ்தரின் அலறல் மற்றவர்களின் ஆற்ருமைக் குரல் மலைகளில் எதிரொலிக்கிறது. இளவரசியை முதலைமடுவிலிருந்து யாராலும் மீட்க முடியவில்லை. அப்படி முயல்வது கூட ஆபத்தானதாக இருந்தது.

அங்கே சோகமயமான மெளனம் அரசோச்சுகிறது. மலையடிவாரத்துக் காற்றில் தீபவர்த்தினியும் நீலாம் பரியும் இனிய குரலில் ஒலிப்பது போல் அடிக்கடி ஒரு பிரமை ஏற்படுகிறது.

நாச்சியார்புரம் பாளையத்து அரசமாளிகை மெல்ல மெல்ல இருள் சூழ்ந்து போகிறது. அதே நேரத்தில் மலையடிவாரத்து மண்டபத்தில்அகல்விளக்கு கள் பலப்பலவாய்ப் பிரகாசிக்கத் தொடங்குகின்றன. |பாளையம் வழித் தோன்றல்கள் இல்லாமல் நலிந்து ஒடுங்குகிறது. வழிபோக்கர் இருவர் பேச்சு.1 யாரோ வழிப் போக்கர் சொல்கிறார்: சத்திய கவிகளின் வயிற்றெறிச்சலைக் கொட்டிக் கொண்டவர்கள் அதற். குப் பிரதிபலன் அனுபவிக்காமல் போகமாட்டார்கள். மற்றவர்: ஆமாம் தம்பி: இதற்கு இந்த மணவாளன் கோதை வரலாறே இகங்ே ஒரு சத்தியமான சாட்சியாகி விட்டதே! - -

. . . . . திரை