பக்கம்:புத்த ஞாயிறு.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


"96) புத்த ஞாயிறு

எனக்குப் படித்துக்காண்பித்து, நான் சொல்கிற திருத் தங்களைச் செய்து அச்சகத்தில் கொடுக்க மேலும் ஒரு நாளாகும். இப்படி ஒரு வாரத்துக் காரியங்கள் முடிவ தற்குள் அடுத்த வாரமும் நெருங்கிக்கொண்டு வந்து விடும். ஏற்கனவே இருந்தவன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஒடிப்போய்விட்டதால் எல்லாக் காரிய மும் அப்படியப்படியே நின்று போய் இருக்கிறதம்மா!

சுகுணு: அதனால்தான் தொடர்கதை சில வாரங்களுக்கு

வெளிவராது என்று அறிவிப்புப் போட் டீர்களா?

குமாரகவி: மனம் நிம்மதியிழந்த நிலையில் அப்படி ஒர் அறிவிப்பைப் போடச் சொன்னேன். புதிய காரியதரிசி தேவை எனறு விளம்பரமும் செய்தேன். ஒரு குருட னின் பலவீனங்களோடும். ஒரு கதாசிரியனின் பலங்க் ளோடும் நான் செயல்பட வேண்டியிருக்கிறது. பொறுமையும், நிதானமும் மிகுந்த ஒரு நர்ஸ் ஒரு நோயாளியைக்கவனித்துக்கொள்வதைவிட அதிகமான அக்கறையுடன் என்னைக் கவனித்துகொள்ள ஒர் ஆன் நம்பிக்கையாக வேண்டியிருக்கிறது. அப்படிக் கவனித் துக்கொள்கிறமனப்பக்குவமும் பொறுமையும் இல்லாத வர்களைப் பணத்தாலும் சம்பளத்தாலும் மட்டுமே விலைக்கு வாங்கிவிட முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை. இதையும் ஒருவேலை என்று ஏற்றுக்கொண்டு வருகிறவர்களிடம் நான் என்னை முழுவதுமாக ஒப்ப டைக்க முடிவதில்லை அம்மா இதை வெறும் உதவியாக ஏற்றுக்கொண்டு என்மேல் உள்ள மதிப்பின் காரண மாக இலவச சேவை செய்ய வருகிறவர்களை நானே அதிக வேலை வாங்கத் தயங்கவேண்டியிருக்கிறது. என் எழுத்துக்களைப் படித்து மயங்கி ஒரு கல்லூரி மாணவி, கைமாறு எதையும் கருதாமல் எனக்குக் காரியதரிசி யாகப் பணியாற்ற விரும்புவதாய்ச் சொல்லிக்கொண்டு நேற்று வந்தாள். இப்போது நீ உட்கார்ந்து கொண்