பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனைபெயர்? 19 பிரபல ஆசிரியர்களின் எழுத்தோவியங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் எனக்குக் கொஞ்சம் ஞானம் இருந்ததால், என்னுடன் இவை சம்பந்தமாக நண்பர் அளவளாவுவது உண்டு . "ஆமாம்; இலக்கியம் பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே: நானும் கதை எழுதட்டுமா?' என்று கேட்டேன். பாதி விளையாட்டும் பாதி உண்மையாகவும், ஊம்!” என்ருர், 岑 兹 球 மூன்ரும் நாள் இரவு: அதே நேரம். 'ஏனய்யா! இதுக்கு முன்னலே ஏதாவது கதை எழுதிப் பழக்கம் இருக்கா, என்ன? ஏதோ ரொம்ப நாள் எழுதின வர் மாதிரி வார்த்தைகள் விழுந்திருக்கே?...ம்: இது கட் டாயம் பிரசுரமாகும். டி. இராமன் என்று சொந்தப் பெயரிலேயா எழுதப் போகிறீர்கள்?" 'எனக்கு இதெல்லாம் புதிது சார்!’ நான் முடிக்கவில்லை; மேஜை மீதிருந்த பேணுவை எடுத்து, தலைப்பின்கீழ் பிலஹரி என்று எழுதி என்னிடம் காண்பித்தார் அவர். - "அப்படி என்ருல் என்ன அர்த்தம்...?’ என்றேன் வெகுளியாக. - "சரிதான்! சங்கீத ஞானம் சூன்யமா? ம்; இதுவும் புதுமைதானே? சங்கீதமே தெரியாத உமக்கு இந்த அழ கான ராகத்தின் பெயர் வைத்தால், படிப்பவர்கள் உம்மை சங்கீதத்தில் புவி என்று நினைத்துக் கொள்ளட்டுமே? என்ருர். - அந்தக் கதை ஆனந்த விகடனில் மூன்று வாரங்கள் கழித்து வெளியாகியது. பிலஹரி பிறந்தது. -