பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尝岛 புனைபெயரும் முதல் கதையும் பூண்டிருப்பதற்கு நண்பர்களும் பத்திரிகாசிரியர்களும் வாச கர்கள் மனத்தில் வேறு ஒரு காரணத்தை உருவாகச் செய் திருக்கிரு.ர்கள். அதாவது, நான் மாயாவியைப்போல் இருக்குமிடம் தெரியாமல் என்னை மறைத்துக் கொள்ளவே இப்புனே பெயரை வைத்துக் கொண்டிருக்கிறேளும்! ஆனல் புனைபெயர் வைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் வாசகர் களிடமிருந்து தங்களே மறைத்துக் கொள்ளத்தானே அன்' வாறு செய்கிருச்கள்? ஆகையால், நான் மாயாவி’ ஆன தற்கு அவர்கள் காட்டும் காரணம் சரியாக மாட்டாது. நான் தமிழ்நாட்டைவிட்டு பம்பாயில் வந்து மறைந்து கொண்டிருக்கிறேனே யென்ருல், அது இந்தப் புனைபெரைப் பூணுவதற்காகவோ, பூண்ட பெயரை நிலே நாட்டுவதற் காகவோ அல்ல. அதற்குக் காரணம் என்வயிறுதான். எனவே, லட்சியமின்றித்தான் நான் புனைபெயர் பூண் டேன். என் முதற் கதை முதல் இன்றளவும் எது எழுதி லுைம் புனைபெயரில்தான் எழுதுகிறேன்: நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் கூடத்தான். அடுத்தாற்போல் எழும் கேள்வி: எப்படி, எதற்காக, 'மாயாவி’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன் என்பது. இதற்கும் திட்டவட்டமான காரணம் எதுவும் கூற இய லாது. நான் எழுத ஆரம்பிக்கும் முன், எங்கள் ஊரில், என் வயதுப் பையன்களைக் கூட்டி வைத்துக்கொண்டு, இரவு முன்னேரத்தில் கற்பனையாகக் கதைகள் சொல்லு வேன். ஒரு சமயம் மாயக் கதைகள்’ என்ற தலைப்பில் பத்து நாட்கள் தொடர்ந்து பத்து விதமான கதைகளே அவர்களுக்குக் கூறினேன். அக்கதைகளிலே மாயாஜாலங் கள் செய்யும் பரதேசி ஒருவரை நுழைத்து அவருக்கு ‘மாயாவி’ என்று நான் பெயர்சூட்டியிருந்தேன். பின்னர், நான் முதல் கதையை எழுதிவிட்டு, என்ன புனைபெயர் வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசித்தபோது, எனக்கு அப்பெயர் நினைவுக்கு வந்தது; அதையே வைத்துக் கொண் டேன்,