பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼5 மயை வி "ஏன் இந்தப் புனைபெயர்?’ என்ற வரிசையில் இம் மாதம் நீங்கள் இடம் பெற வேண்டும் என்று திரு பூவை' கடிதம் எழுதியுள்ளார். இதைவிடச் சங்கடமான பணியை ஒர் ஆசிரியர் ஒர் எழுத்தாளனுக்கு அளிக்க முடியாது என் பது என் கருத்து. ஆம்; கதை எழுதுவதைவிட இது சங்கடமானதுதான். ஏனென்ருல் கதையில் கற்பனையை இஷ்டம் போல் ஒடவிட்டு எழுதிவிடலாம். ஆளுல் இம்மாதிரி விஷயங்களில் வடிகட்டின உண்மையைத்தான் கூறியாக வேண்டும். வாசகர்களோ கற்பனையை ரசிப்பதுபோல் உண்மைச் சம்பவங்களை ரசிப்பதில்லை. அதிலும் என் புனைப் பெயரைப் பற்றிய உண்மை சாதாரணமானது: உப்புச் சப்பில்லாதது. இருந்தாலும், ஆசிரியர் வேண்டுகோளைப் புறக்கணிக்க மனமின்றி அதை எழுதுகிறேன். நான் ஏன் புனைபெயர் வைத்துக்கொண்டேன் என்று என்னேயே கேட்டுக்கொண்டால், எனக்குச் சரியான விட்ை யளிக்கத் தெரியாது. ஏனென்ருல், சிலரைப்போல் நான் எவ்வித லட்சியத்தையும் மனத்தில் கொண்டு புனைபெயர் வைத்துக்கொள்ளவில்லை. எழுத்துலகில் நான் புகுந்த காலத்தில் புனைபெயர் வைத்துக்கொள்ளுவது ஒரு நாகரீக்' மாக இருந்து வந்தது. அதை ஒட்டியே நானும் புனைபெயர் பூண்டேன். ஆனல் நான் மாயாவி’ என்று புனைபெயர்