பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புனைபெயரும் முதல் கதையும் வதாலோ, யாரும் பெரிய எழுத்தாளராக ஆகிவிட முடி யாது. தாம் எழுதும் எழுத்துக்கு தாமே உயர்தரத்தை கற்பித்துக்கொள்வது பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியம் என்று தான் நினைக்கின்றேன். கம்பன் போன்ற மாபெரும், இலக்கிய கர்த்தாக்களிடம் கூட அவையடக்கம் என்ற பெருங்குணத்தைக் காண்கிருேமே தவிர, அவையகந்தை என்ற சிறு குணத்தை நாம் காண்பதில்லை. எழுத்தாளர் கள் இதைக் கவனிக்கவேண்டும், யாரையும் குறை சொல் லவோ, என் எழுத்தைப் பற்றிப் பெருமைப்படுத்தவோ இதை நான் சொல்லவில்லை. ஆரம்ப எழுத்தாளர்களா வது, இப்பொழுது நாம் கானும் எழுத்து அகந்தை வலை யில் சிக்கி விடாமல், பெரியோர்களின் சிறந்த அடிச்சு வட்டில் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். என் எழுத்து சம்பந்தப்பட்ட வரை, அவை மிகச் சாதாரணம். பெரிய இலக்கிய கர்த்தாக்கள் கொடுத்த பிச்சை. மக்கள் விரும்பிப் படிப்பதால், எழுதுகிறேன். விரும்பாமல் வெதுப்பதானுலும், நான் யார் என்று தெரிய வேண்டாமென்று சாண்டில்யன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டேன். இப்பொழுது அந்தக் குட்டும் வெளிப்பட்டு விட்டது!