பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனே பெயர் 33 "சாண்டில்ய ஸ்ம்ருதி’ என்ற பெரிய நூலை எழுதியிருக் கிருர், இரண்டாவது சாண்டில்யன் தமிழ் நாட்டவர் அவர் முல்லைப் புன ஆராய்ச்சியில் ஈடுபட்டு நூல்கள் எழுதியவர். புனைப் பெயரில் எழுதுவது என்று தீர்மானித்தவுடன் இந்த இரண்டு பெரியார்களுடைய பெயரை வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்படி வைத் துக்கொண்டாலாவது எழுத வராதா என்ற ஆவல். தவிர, தான் சாண்டில்ய கோத்திரத்தில் பிறந்தவன். புனைபெயர் இப்படி அமைந்ததற்கு அதுவும் முக்கிய காரணம். இத்தகைய பெரியார்களுடைய பெயரை வைத்துக் கொண்டதாலோ, சில நாவல்களை நான் எழுதியிருப்ப தாலோ நான் என்ன ஒரு பெரிய எழுத்தாளஞகக் கருத வில்லை. வான்மீகி, கம்பர், வள்ளுவர் முதலிய மகான்கள் எழுதிய பேரிலக்கியங்களைப் படித்தால், நான் எழுதுவது எழுத்தாகவே எனக்குப் புலப்படவில்லை. ஆகவே, நான் எழுதுவது ஏதோ பெரிய இலக்கியம் என்ருே, அவை அமரத்வம் வாய்ந்த படைப்புக்கள் என்ருே, நான் நினைக்க வில்லை. இப்பொழுது நாம் எழுதும் எழுத்துக்களில் எது இலக்கியம், எது இலக்கியம் அல்ல என்பதை ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் வரும் மக்களே நிர்ணயிப்பார்கள் என்பது என் அபிப் பிராயம். கால வெள்ளத்தால் கொண்டு போகப்படாத எழுத்துக்கள் பிற்காலத்தில் இலக்கிய மாகத் திகழும். ஆகவே, அதைப் பற்றி இன்று செய்யப் படும் சர்ச்சைகள் பயனற்றவை என்பது என் தாழ்மை யான அபிப்பிராயம். சில அன்பர்கள் இலக்கிய கர்த்தாக்களின் பட்டியல் களை தயாரிப்பதிலும் தங்களையும் அதில் சேர்த்துக் கொள் வதிலும் முனைந்திருப்பதை நான் அறிவேன். பட்டியல் தயாரிப்பதாலோ, நமக்கு நாமே ஓர் இடத்தை சிருஷ்டித் துக் கொண்டு அவற்றை அச்சில் பார்த்துக் கொள்