பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4. "சாண்டில்யன்’ கசாண்டில்யன் என்று ஏன் புனை பெயர் வைத்துக் கொண்டீர்கள்?’ என்று நண்பர் பூவை.ஆறுமுகம்கேட்டார். அதைப் பற்றி விவரிப்பது அவ்வளவு அவசியமாக எனக்கு முதலில் புலப்படவில்லை. ஆகவே அவர் திரும்பத் திரும்பக் கேட்டும்,இரண்டு மாதகாலம் பதில் சொல்லாமலே தள்ளிப் போட்டு வந்தேன். வாசகர்களும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவதாக அவர் வற்புறுத்தவே, இந்தச் சில வரிகளை எழுத முன் வந்தேன். நான் புனைபெயர் வைத்துக் கொண்டதற்குத் திட்ட மான காரணங்கள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் என் இயற்பெயரான எஸ். பாஷ்யம் என்ற பெயரிலேயே சில சிறு கதைகள் எழுதினேன். ஆனால், நான் எழுத ஆரம் பித்த காலத்தில் எல்லோரும் புனேபெயர் வைத்துக் கொண் டிருந்தபடியால் நாம் அந்த மாதிரி வைத்துக் கொள் வோமே என்றுதான் சாண்டில்யன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். - வரலாற்றைப் பார்க்கப் போளுல், பாரத நாட்டில் முக்கியமாக இரண்டு சாண்டில்யர்கள் பிரபலமாக இருத் திருக்கிருர்கள். முதல் சாண்டில்யன் வடநாட்டைச் சேர்ந்தவர். வாழ்க்கை முறையை வகுத்துச் சொல்லும்