பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனைபெயர் 37 “முதலில் வைத்த என் இயற் பெயரை என்னேக் கேட் டுக் கொண்டா வைத்தீர்கள், இன்று என் பெயரை மாற்றி உங்கள் விருப்பம்போல் இன்னென்றை நான் வைத்துக் கொள்ள?’ என்று நான் எதிர்த்து.வாதாட விரும்பவில்லை. இளைஞனெனப் புதுப்பித்த விந்தைக்காகவேனும் நான் அவ ருடைய மனத்தைக் குளிரச் செய்யவேண்டுமல்லவா?இதை விட ஒரு மகனுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்? எடுத்த காரியம் யாவினும் வெற்றி கண்ட பாரதியின் பாடல்களில் என் தந்தைக்குத் தனி பக்தி. என்னேப் போலவோ புதுமைப் பித்தனைப் போலவோ அவர் படிப் பென்னும் பாதையில் சறுக்கி விழுந்ததில்லை. அவரை நான் என் முன்னெளியாக ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது? என் தந்தையின் மனத்திலிருந்து வெளிப்பட்ட புயற் காற்றுச் சூழ்நிலை என்னுள் சில கேள்விகளை எழுப்பியது. "வளமான வாழ்க்கைக்கு நீ என் செய்ய இருக்கிருய்??? என்ற கேள்விக்கு, சாகாத இளமை என்னில் நிலைக்க நான் உழைக்க வேண்டும்!’ என்று நான் தெளிவுறுத்திக் கொண் டேன். இதனை அடுத்து பாரதித்தனமான கவிதைகள் சில என்னிடமிருந்து அவ்வப்போது உருவாயின. வளந்தரும் இளமைக்கு இலட்சிய முன்னெளி பாரதி ஆசி தரவே, இளம் பாரதி என நான் புதுப்பிறவி பெற்றேன். என் கைப்பிடியில் சிக்கியது முருங்கைக் கொம்பு அல்ல, புளியங் கொம்பே யென்று அறிந்தபோது என் தந்தையின் மூச்சிலே பெருமிதம் கலந்தது. பெயரில் என்ன இருக் கிறது?’ என்று கேள்வி கேட்ட ஒரு வகை நண்பர்களுக்கு மறுமொழி சொல்லும் வண்ணம் இன்னுெரு வகை நண்பர் கள், இந்தப் பெயரில் பொருநை ஆற்றின் கற்பனை விளம் தேங்கிக் கிடக்கிறது!’ என்ருர்கள். எது எப்படியாளுல் என்ன? உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களிடம் சொல்லியதைத்தான் நான் இங்கேயும் திரும்பச் சொல்ல வேண்டும்- இலக்கியத்தில் என் பெயரைக் காப்பாற்ற தான் முயல்வேன்!” 나-3