பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புனே பெயரும் முதல் கதையும் நாளில்-அதாவது அவரது நெல்லே வாழ்க்கை நாளில்:புதுமைப்பித்தன் குடி இருந்தார். இதற்கு அடுத்தது. இரண்டாம் தெரு என்ற அப்பர் சுவாமிகள் தெரு. இந்தத் தெருவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருந்தவர் நண்பர் திரு (1) கோமதி ஸ்வாமிநாதன். மூன்ருவதாக இருந்த தெரு கம்பராமாயணத் தெரு. இத்தெருவில் குடியிருக்கும் எழுத்தாளகை என்னை நிய மித்துக் கொண்டேன். முதல் தெருவிலிருந்த இலக்கியப் பித்தமும், இரண்டாம் தெருவிலிருந்த இன்பப் பெருக்கும் மூன்ரும் தெருவுக்கு வந்து சேர வழி இல்லையா? அதுவரை இயற் பெயரில் கதைகளையும், கவிதைகளையும் எழுதி வந்த நான், இப்படிப் புதிய சிந்தனை ஒன்றின் ஆக்கிரமிப்பால் என்மேல் முலாம் பூசிக் கொண்டேன். புனை பெயர் இடைத்தது, இன்பப் பித்தன் என்று. இதை என் தந்தை யிடம் தெரிவித்த போது... . .

பிழைச்சிருக்கிற வழியைப் பாருடா: அவனைப் போல நீயும் சாகப் போறியா?

என் தந்தையின் சொற்களில் கோபம் கலந்திருந்தது, மகன் வளத்தோடு வாழ வேண்டுமென்ற பரிவு கலந் திருந்தது. அவர் அழுத்தமாகக் கூறிய அவனே' என்ற சொல் புதுமைப் பித்தனைக் குறிக்கும். இத்தனைக்கும் என் தந்தையும் புதுமைப் பித்தனும் நண்பர்கள். ஒரே கல்லூரி யில், ஒரே வகுப்பில் உட்கார்ந்து, ஒரே வாத்தியாரைக் கேலி செய்தவர்கள். அப்படியானுல் நண்பனை நினைவூட்டும் 'இன்பப்பித்தன் அவருக்கு மகிழ்ச்சியைத் தராமல் இருந் தது ஏன்? காரணம் இருந்தது. புதுமைப் பித்தனப் போல நானும் எழுத்தின் ஆதிக்கத்தினல் படிப்பென்னும் பாதை யில் சறுக்கி விழுந்திருந்தேன். - தன் மகனை வளமுடன் காண விரும்பாத தந்தை உண்டா? எனவேதான் கோபத்தோடு கோபமாக, புனே பெயரை மாற்றிக்கொள்!" என்று அவர் என்னிடம் கூக்குர லிட்டார். - -