பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 'ஜடாதரன்’ பேராசிரியர் கல்கி அவர்கள் புனைபெயர் மகாத் மியத் தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிரு.ர்கள்: எல்லோருக்கும் தெரிந்த சொந்தப் பெயரில் எழுதுவதைவிட, புனைபெயரில் எழுதும்போது, வாசகனுக்கு எழுத்தில் ஆர்வம் ஏற்படு கிறது என்பது சர்வ நிச்சயம். சொந்தப் பெயரை அலட்சி யமாக நினைத்து ஒதுக்கிவிடக் கூடிய ஒருவன், அதே எழுத் தாளர் புனைபெயரில் எழுதும்போது, அற்புதம், அற்புதம்! . என்று படிக்கிருன்.” 'கல்கி'யின் வாக்கு-ஹாஸ்யமானலும், அது சத்திய வாக்குத்தான். நான் பாலு என்ற பெயரில் 1948-ஆம் வருடம் முதன் முதலாக சிறுகதைகள் எழுதத் தொடங்கிய போது, எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலதரப் பட்டவை. பாலு’ என்கிற பெயரில் கவர்ச்சி இருப்பதாக எனக் குத் தோன்றவில்லை. மேலும், வெவ்வேறு காலங்களில் 'பாலு என்ற பெயர் பத்திரிகைகளில் அடிபட்டிருப்பது பழைய வால்யூம்'கள் சிலவற்றைப் புரட்டும்போது தெரிந் தது. உலகத்தில் எத்தனையோ பாலு’க்கள்! கணக்கிட முடியுமா அவர்களே? அத்தகைய லட்சத்தில் என்னை மாத் திரம் பிரித்து ஒருவளுக்க என்ன வழி? புனைபெயர்தான்!