பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனைபெயர் 45 சிறந்த சிந்தனையாளரான திரு. கே. எஸ். வெங்கட சமணி அவர்களின் எழுத்துக்களில், மாயவரத்துப் பள்ளி யில் படித்த என் இளமை நாட்களிலேயே நான் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தேன். அவருடைய கதா பாத்திரம் ஒன்றின் பெயரான ஜடாதரன் என்பதைத்தான் நான் என் புனைபெயராக மிகவும் மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுத் தேன். - 'ஜடாதரன் என்ற புனைபெயரில் 21-4.5 கல்கி' இதழில் வெளியான அன்பு மலர்ந்தது' என்ற கதை என் புனைபெயரை குறிப்பிட்ட சில அந்தஸ்துள்ள குடும்பங் களில் பிராபல்யம் செய்வித்தது. காரணம்-அந்தக் கதை யின் மையக் கருத்து, என் பால்ய சிநேகிதன் ஒருவனுடைய குடும்பச் சூழ்நிலையை நன்கு தெரிந்துகொண்டிருந்த ஏராள மான நண்பர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒருவரு டைய மகிழ்ச்சி இன்ஞெருவருக்கு துக்கமாய் இருப்பதிை நாம் கண்டிருக்கிருேமல்லவா? அது வேறு விஷயம்...! அவ்வப்போது பளிச் சென்று எனக்குத் தோன்றும் சில கருத்துக்களை மாத்திரம் கதைகளாக்கிவிட்டு 'சும்மா” யிருக்கிறவன் நான். என்னுடைய இலக்கிய நண்பர்களில் மிக அத்யந்தமான சிலருக்கு நான் நிறைய எழுதவில்லை என்று பெருங் குறை. எழுத்துக்களுக்கு ஒர் உயர்ந்த லட்சி யம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறவன் நான். வாசகர் களுக்குக் கொஞ்சங்கூட ஏமாற்றம் தரக்கூடாத வகையில் கதைகளை எழுதி நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணி எழுத முயற்சி செய்பவன் தான். ஆனல், என்னையும் என் எழுத்தையும் பிடிக்காத சிலர். 'இவ்ன் யாரடா சனியன், அப்படி என்ன பிரமாதமாய் எழுதிக் கிழித்து விடுகிருன்?’ என்று சொன்னுலும் சொல் 总s醇莎é第。 ஆம், சாட்சாத் சனீஸ்வர பகவானுக்கு ஜடாதரன்' என்ற ஒரு பெயரும் உண்டு.