பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 'பூவை: பேராசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குத் தமிழ்த் தென்ருல் திரு. வி. க. அவர்கள்பேரில் ஒர் அத்யந்த பக்தி. கல்யாணசுந்தரம் என்ற பெயரில் முதல் இரண் டெழுத்துக்களுடன் தம் பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து கல்கி ஆளுர். இதில் பக்தியின் சரித்திரம் அடக்கம். கல்கி அவதாரத்துக்கும் இதற்கும் சம்பந்த மில்லை. அன்னரது துணைவியாருக்கும் இதற்கும் சம்பந்த மும் இல்லை. பேராசிரியருக்குப் புனைபெயரின் அவசியம் தெரியு மென்ற சட்டமில்லை. ஆனல் பத்திரிகையின் ஆசிரியருக்குப் புனைபெயரின் அருமை அவசியம் தெரியும். இவ்வகையில் பேராசிரியர்; கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கு கல்கி’ எனும் புனைபெயரின் அருமை தெரிந்தது. நாடும் ஏடும் கல்கி’ யைப் புரிந்துகொண்டன. இன்று கல்கி வாழ்கிருர்! அந்த அன்பான உள்ளம் ஒர் இலக்கிய ஆர்வத்தை வளர்த்து வாழ்த்திய போதுதான் பூவை என்ற என் ஊர்ப் பெயரே என் புனைபெயரானது. அருமைக் கல்கி அவர்கள் தாம் எனக்கு பூவை’யைச் சூட்டினர். இப்போது, பெரும்பாலானேர் ஆறுமுகத்தை மறந்துவிட்டார்கள். பூவையை யாரும் மறக்க முடியாது!