பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 55 இந்த இரண்டு மகான்களையும் என் இலக்கிய வாழ்விலே ஒளி காட்டியவர்களாக நினைத்து நான் எப்பொழுதும் வணங்குகிறேன். இந்த இலக்கிய ஆசைகளோடு நான் பம்பாய்க்கு 1942-ல் சென்றேன். அங்கிருந்து சில கதைகள் எழுதி அனுப்பினேன். ஒன்றும் பயன் இல்லை. இரண்டு வருஷங் கள் ஒன்றும் எழுதவில்லை. 1944-மத்தியில் ஒரு கதை எழுதி துமிலன்' நடத்தி வந்த மாலதி க்கு அனுப்பினேன். பம்பாயில் அப்பொழு தும் இட நெருக்கடி, உத்தியோகம் கிடைத்தும் தங்க இடம் கிடைக்காமல் ஊருக்குத் திரும்பியவர்களும் உண்டு. ஊருக்கும் திரும்ப முடியாமல், இருக்கவும் இடமில்லாமல் தவித்து சித்தப் பிரமை கொண்ட ஒருவருடைய கதையை எழுதி அனுப்பினேன். "ரூம் பைத்தியம்' என்ற தலைப்பில் அது வெளியாயிற்று. உண்மையை அடிப்படையாக வைத்துக்கொண்டு, காலத்திற்கு ஏற்றதாக இருந்ததால், என் பம்பாய் நண் பர்கள் அதை ரொம்பவும் ரசித்தார்கள். அதைத்தானே என் முதல் கதை என்று கூறவேண்டும்?