பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$垒 புனைபெயரும் முதல் கதையும் பொழுது தமிழ் நாட்டில் இருந்த பரபரப்பைப்பற்றி என்ன சொல்வது? இளைஞர்கள், ஸ்திரீகள், முதியோர்கள் எல்லோரும் முத்தையன் என்ன ஆளுன், கல்யாணிக்கு விமோசனம் உண்டா, அபிராமியின் குழந்தை மனம், சர்வோத்தம சாஸ்திரியின் மனிதத் தன்மை என்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தான் மன்னர் குடியில் இருந்தேன். அங்கு சனிக்கிழமை தோறும் காலே எட்டு மணி ரயிலில் விக டன் பிரதிகள் வரும். தான் நேராக ரயிவே ஸ்டேஷ னுக்கே சென்து பிரதியை வாங்கிப் படித்துக்கொண்டே நடத்து திரும்பி வருவேன். வீட்டிலே பெண்டிர்கள் விகடன் வந்து வாசித்து விட்டுத்தான் குளிக்கப் போக வேண்டும் என்று காத்திருப்பார்கள். படிப்பதற்கு நான் முந்தி, நீ முந்தி என்ற போட்டி வேறு. இதுபோல் தான் ஒவ்வொரு வீட்டிலும் அப்பொழுது நடந்தது. அவருடைய கதைகள் தமிழ் இளைஞரிடையே நாமும் எழுத வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பியது. அந்த ஆசை என் உள்ளத்திலேயும் புகுந்து எழுதத் துண்டியது. அவருடைய கேதாரியின் தாயார்’ என்ற கதையைப் பன்முறை படித்தாலும், அதில் உள்ள சோக ரஸமும், கதைக் கோப்பும், திகட்டாத சொல் அமிர்தம். அந்தக் கதையிலே ஊறிப்போன நான் என் புனைபெயரையும் கேதாரி என்றே வைத்துக் கொண்டேன் என்பது தனிக் கதை. இதே சமயத்தில், பேராசிரியர் பூர் ரா. பி. சேதுப் பிள்ளையவர்கள் கம்பனையும், குறளையும் பற்றிப் பிரசங் கங்கள் செய்து வந்தார்கள். ஏதோ கச்சேரி கேட்கும் மாதிரி இருக்கும் அவருடைய பேச்சுக்கள், சம்பவங்களை நாடகமாக்கி நம் முன்னே நிகழ்வதுபோல இருக்கும் அவ ருடைய பிரசங்கம். இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசையை என் இளநெஞ்சில் எழுப்பியது இவர் தான்.