பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேதகள்’ "என் முதல் கதை' என்ருல், இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. கையெழுத்தில் முதலாக எழுதியதா, அல் லது அச்சில் முதன் முதலாக வந்த கதையா என்பதுதான். என்னுடைய முதல் மூன்று கதைகளும் அச்சு இயந் திரத்தில் ஏருமல் என்னை ஏமாற்றிவிட்டு எங்கோ ஒளிந்து போயின. ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதியும் பயனில்லை. அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளன், எழுத்தாளஞகவ்ே பிறக்கிருளு, அல் லது ஆர்வ மிகுதியிலுைம் பிடிவாதமான உழைப்பாலும், சாதாரண மனிதன் எமுத்தாளளுக ஆக்கப்படுகிருளு என்ற சர்ச்சை எப்பொழுதும் இருந்து வருகிறது. இதிலே யும் இரண்டு கட்சிகள் உண்டு. நான் எப்பொழுதும் பின் ஞல் சொன்ன வகையையே ஆதரிப்பவன். நானும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவன்தான். இளமையிலிருந்தே எனக்குக் கதை கேட்கும் ஆர்வம் இருந்தது. ஹரிகதையில் அபாரப் பிரேமை, சுமார் பதினறு, பதினேழு வயதாகும் பொழுது, தமிழகத்தில் கல்கி இலக்கிய ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப் பொழுது அவருடைய, கள்வனின் காதலி ஆனந்த விகட’ னில் தொடர் கதையாக வந்து கொண்டிருந்தது. அப் Li-4