பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனைபெயரும் முதல் கதையும்

விதையை விழுங்கினதால், மற்றக் குழந்தைகள் அவள் வயிற்றிலிருந்து ஆரஞ்சு மரம் முளைத்து அவள் இறந்து விடுவாள் என்று பயப்படுகிறார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் காவேரி.

காசை விழுங்கினல் காசு மரம் முளைக்குமே. பெற்றவளின் வறுமை நீங்குமே என்ற ஆசையால் காசுகளை விழுங்குகிறாள். தான் இறக்கப்போவது நிச்சயம் என்று தெரிந்தும் அப்படிச் செய்கிறாள். கடைசியில் மரம் முளைக்கிறது! பாசி பிடித்த செப்புக் காசுகளால் வயிறு கெடுகிறது. வாந்தி எடுத்துச் சாகிறாள் காவேரி. அவளைப் புதைத்த இடத்தில் ஒரு மாங்கன்று முளைக்கிறது. அதற்குக் காவேரி என்று பெயரிட்டு அதைக் கண்ணிரால் வளர்க்கிறாள் தாய். இதுவே காசுமரம்.

'கலைமக'ளில் இந்தக் 'காசு மரம்' வெளியான பிறகுதான் சிறுகதை எழுத்தாளன் என்ற முறையில் நான் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப் பெற்றேன். இதையும் என் முதல் சிறுகதை என்று சொல்லலாமல்லவா?