பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 51

இருபது வருடங்களுக்கு முன்பு என் பள்ளி வாழ்க்கையில் நடத்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பே அந்தச் சிறுகதை. குலமும் பணமும் அங்கே இன்றைய நிலையைவிடக் கொடுமையாகக் கூத்தாடின. சமுதாய வாழ்க்கைக்கு மனிதனை உருவாக்கும் கல்விச் சாலைகளிலேயே வேற்றுமையின் வித்துக்கள் ஊன்றப்பட்டன.

புதுக்கோட்டையில் வாழ்ந்த நான் செழிப்பு நிறைந்த பகுதியைக் கண்டதில்லை. சின்னஞ் சிறு வயதில் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கொள்ளிடக் கரையின் நாணற்காடும், தென்னந் தோப்பும், தேக்குமரக் கூட்டமும் என்னைப் பிரமிக்க வைத்தன. என் மனத்தில் அன்று தொட்டுப் பசுமையாக இருந்த அந்தக் காட்சியையும் என் முதல் கதையில் எழுதினேன்.

ஒருபுறம் வளமும் அழகும் நிறைந்த, இயற்கை உலகம். மற்றொரு புறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள் - இதையே என் கதைக் கருத்தென்று சொல்லலாம்.

பள்ளியில் என் சிறு கதையைப் படித்த பெரிய மாணவர்களும் ஆசிரியர்களும் அதை எப்படி எப்படி மதித்தார்களோ தெரியாது. ஆனால் நிச்சயம் அதை எழுதிய சிறுவனுக்கு-அப்போது எனக்குப் பதினறு வயது-தீமையை எதிர்க்கத் துடிக்கும் ஒரு நெஞ்சு இருக்கிறது என்பதை மட்டுமாவது உணர்ந்திருப்பார்கள்.

இந்தச் சிறுகதையைத் தவிர இன்னொரு கதையையும் என்னுடைய முதல் கதை என்று சொல்லுகிறவர்கள் உண்டு. 'கலைமக'ளில் முதல் முதலில் வெளியான 'காசு மரம்' என்ற கதையே அது.

காவேரி என்ற ஏழைச் சிறுமி தன் தாயாரை வறுமையிலிருந்து காப்பாற்றக் காசு மரம் முளைக்க வைக்கிறாள்! வகுப்பில் யாரோ ஒரு குழந்தை ஆரஞ்சு