பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 புனைபெயரும் முதல் கதையும்

ஆனால், தீபாவளிக்கு முதல் நாள் அவன் தமக்கை திடீரென்று இறக்கிறாள். அவனுக்கு இவ்வுலகத்திலிருந்த ஒரே ஒரு ஊன்றுகோலும் ஒடிகிறது. அவனுடைய தமக்கையின் சாவுகூடப் பணக்காரக் குழந்தைகளின் பரிகாசத்துக்கு இலக்காகிறது. இதைப் பொறுக்க முடியாமல் அவன் ஆற்றில் விழுந்து உயிர் விடுகிறான்.

கதையை எழுதிக் கொடுத்த மறுநாள் தமிழாசிரியர் என்னைத் தனியே கூப்பிட்டார். எடுத்த எடுப்பில் "இதை எங்கே காப்பி அடித்தாய்?’’ என்று கேட்டார். எனக்குக் கண்கலங்கி விட்டது.

"போடுவதானால் போடுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம். இனி இப்படிப் பேசாதீர்கள்” என்றேன்.

சிரித்துக் கொண்டே தமிழையா என்னைத் தட்டிக் கொடுத்தார். "கதை நன்றாக இருக்கிறது. ஆனால் தலைப்பை மாற்ற வேண்டும்" என்றார்.

நான் கொடுத்திருந்த தலைப்பு - 'அவன் ஏழை', அதை அவர் 'மிடியால் மடிதல்' என்று மாற்றி அமைத்தார். கதை வெளிவந்த பல நாட்களுக்குப் பின்பு, மேல் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அந்தத் தலைப்பின் பொருளை அறிந்து கொண்டேன். ஏழ்மையால் இறத்தல் என்று அர்த்தமாம். எப்படியாவது கதை வந்து விட்டதே என்ற பெருமை எனக்கு. அடடா முதல் முதலாக என் எழுத்துக்களை அச்சில் கண்டபோது நான் அடைந்த ஆனந்தம்...!

முழுவதும் கற்பனைக் கதை என்று நான் அதைச் சொல்ல முடியாது. அன்று நான் எழுதிய முதற்கதையும் சரி. இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால் கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே. -