பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை † அகிலன் பதினெட்டு வருடங்களுக்கு முன்னுல் நான் ஒன்ப தாவது வகுப்பில் படிக்கும்போது எழுதிய முதல் கதை இது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் வெளியான கல்லூரிச் சஞ்சிகையில் எழுதினேன். கதையின் நகல் இப் போது கைவசம் இல்லை. கதைச் சுருக்கம் நினைவில் இருக் கிறது. இதுதான் கதை: பெற்ருேரற்ற ஒர் ஏழைச் சிறுவன் நகரத்துப் பள்ளிக் கூடத்தில் படிக்கிருன். பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் அவன் தமக்கை அவனே மிகவும் சிரமப்பட்டுப் படிக்க வைக் கிருள். பணக்காரக் குழந்தைகளின் மத்தியில் படிக்கும் போது, அவனுடைய ஏழ்மை பரிகாசத்துக்குள்ளாகிறது. தீபாவளி நெருங்குவதால், உன்ளவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பெருமையடித்துக் கொள்ளுகிரு.ர்கள். பைய னின் தமக்கையும் விரைவில் தீபாவளிக்கு உடையும் பண மும் அனுப்புவதாக வாக்களிக்கிருள். ஏழைச் சிறுவனும் மற்றவர்களின் பெருமையில் பங்கு கொள்ளப் பார்க் கிருன். -