பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 57 யின் உயிர்களைக் காப்பது, திருநேல்வேலி முனிசிபால்டி யார் கடமையாக வந்து விடிந்தது. அவர்கள், ஏழு மைலுக்கு அப்பால் போய் தோணிக்காரர்களைக் கூட்டி வந்து காப்பாற்றுவது மிகவும் கஷ்டமாக இருந்த காரணத் தால், ஒரு தோணியையே விலைக்கு வாங்கினர்கள்; தோணி யோட்டியும் வேலைக்கு அமர்த்தப்பட்டான். தோணியைச் செய்து முடித்த முகூர்த்தம்: தாமிர வர்ணியில் வெள்ளம் வந்தாலும் பகற் பொழுதில் வந்தது: ஆபத்தின்றி ஏழைகள் பிழைத்துக் கொண்டார்கள். "இந்தத் தோணிச் செலவு வீண். தோணிக்காரன் சம் பளம் தண்டம்’ என்று முனிசிபல் சபையில் விவாதம் நடந் ததாம். தோணிக்காரன் ஒருவன் தேவையில்லை, அது வீண் தண்டம்' என்றும் தீர்மானம் நிறைவேறியதாம். தோணிக்காரன் வேலையிலிருந்து விலக்கப்பட்டான். அந்த வருஷத்தில் நாற்பதிற்கும் அதிகமான ஏழைகள் தைப்பூச மண்டபத்திலே அவதிப் பட்டார்கள். இரண்டு மூன்று நாள் முப்பதடி உயரமான மண்டபத்தில் நின்ருலும், ஒரடி தண்ணிர் அவர்கள் காலடியில் ஒடும்வரை ஆபத்திலே தவித்தார்கள். ஆகாரம் கொடுப்பதும், காப்பாற்றுவதும் பிரம்மப் பிரயத்தனம். மண்டபத்தின் தட்டட்டியில் (மொட்டை மாடியில்) நிற்பவர்கள் ஆற்ருேடு ஒரிருவர் அடித்துப் போவதைக் காணச் சகியாமல், பொதுஜனங்கள் துடித்தார்கள். முனிசிபல் தோணியை வரவழைக்க முயன் ரூர்கள். தோணியோட்டியில்லை; தோணி மட்டும் இருக் கிறது” என்ற விபரம் அறியவும், பின்னர் மாமூல்படியே, ஏழு மைலுக்கு அப்பாலுள்ள தோணிக்காரர்கள் வந்து காப்பாற்றினர்கள். இதுவே, என் முதற் கதையின் வித்து. ஏழைகளின் பெயரால், நடத்த குளறுபடியில் மற்ருெரு திருப்பம். அதே தோணியைக் கெட்டுப் போகாமல் காப்பாற்ற, திருநெல் வேலி முனிசிபால்டியார், நயினர் குளத்திலே ஒடவிடுவது, பெரியவர்களுக்கு பிளஷர் டிரிப் காட்டுவது என்று முடிவு