பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ご புனைபெயரும் முதல் கதையும் செய்தனர். முதன் முதலாக கலெக்டர் வோட் ஹவுஸ் (மரவீடு), தமது மனையாட்டியுடன் போனதாகவும், கலெக் டர் துரையை.துரைசாணியை ராமர்-சீதையாக எண்ணிய தாகவும், அவரது மெய்க்காவலர்களே குகளுக எண்ணி உத்தார் என்றும், கலெக்டர் நாயை, அதுமாராக எண்ணிய போது, குகளுேடு போன கட்டத்தில் அதுமார் கிடையாது என்ற எண்ணம் வரவே, சீ சி!” என்று சொல்ல நாய் பாய்கிறது: தோணி அகில மோதுகிறது. கலெக்டர் கோபத்தால் தோணியில் மிதிக்க, தோணி பொத்துக் கொண்டு தண்ணிர்க் குமிழிகளை வரவேற்கிறது; துரை துரைசாணி இவர்கள் தொப்பியை வாளியாக மாற்றி டபேதார்கள் நிலைமையை சமாளித்தார்கள்.’’ என்று கற் பனேயாக மாற்றினேன். ஏழைகளின் பெயரால் வாங்கப் பெற்ற தோணியை கரையான்களுக்கு விருந்தளித்தனர் முனிசிபால்டியார் என முடித்திருந்தேன். ஒருமாதம் சென்ற பின்னர் அந்தத் தோணியைப் பார்க்க முனிசிபால்டிக்குப் போனபோது அழகாக பெயிண்டு செய்து அதைத் தரை மட்டத் திலிருந்து முட்டுக் கொடுத்து உயரமாகப் போட்டிருந்தார் கள். வேப்பமரத்து நிழலிலே தோணி கிடந்தது. அங்கே நின்ற ஒருவர் என் கேள்விக்கு பதிலாக, யாரோ ஒரு பயல் இதைப் பற்றி ஆனந்தவிகடனில் எழுதி விட்டான்: அதனுல் தோணியைச் செல்லரித்து விடாதபடி பெயிண்டு செய்து காத்திருக்கிரு.ர்கள்’ என்று சொன்ஞர். என் தோள்கள் விம்மின: என் எழுத்துக்கு மதிப்பு இருக்கிறது. வெற்றி இருக்கிறது - இப்படியெல்லாம், பொது ஜன நன்மைக்காக நான் எழுதிய கதை அது ஒன்று தான். பிறகு, பிரசார நோக்கத்தோடு எதுவுமே நான் எழுதாமல் போய்விட்டது, ஆச்சர்யமாக இருக்கிறதா? நான் எழுதும் கதைகள், நாடகங்கள் தங்களைக் குறிப்பதாக என் உறவினர்கள், தண்பர்கள் ஒரு சிலர் சொல்ல வந்த தால், வெளிப்படையாகத் துலாம்பரமாக பிரசாரம் எழு