பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 59 தக் கூடாது என்று மூடி மறைத்து, கலையம்சம் நிறைந்த தாக எழுதிவிட்டு, தப்பிக் கொள்வதே இலக்கியத்தைத் தொடர்ந்து எழுதுகிறவன் செய்யும் வழி யென்று வகுத்துக் கொண்டேன். மறைத்துக்கொண்டு இன்றும் கதை, கட் டுரை, நாடகங்கள் எழுதுகிறேன். என் முதற்கதையில், மரவீடு (வோட் ஹவுஸ்) என்றி ருந்ததை ஆசிரியர் கல்கி அவர்கள் மரவீடு என்று மாற்றி யிருந்ததை ன்ெகுவாகக் கண்டித்துக் கடிதம் எழுதினேன். நேரில் சத்திக்கும் போது, அதுபற்றிச் சொல்லுகிறேன் என்று எழுதிஞர்கள். வண்ணுர்பேட்டையில் டி. கே. சி. வீட்டுக்கு கல்கி வந்தபோது ஞாபகமாக, நீங்கள் எழுத் துத் துறைக்குப் புதிது. ஆகவே உண்மையான பெயர்களே இவ்வாறு சீர்திருத்தம் காரணமாக தாக்கும்போது கூட வெளியிடுவது தொல்லை தரும். இது நிறைய எனக்கு அனு பவம். அதே கலெக்டர் இன்னும் திருநெல்வேலியில் இருக் கிரு.ர். அப்படி இருக்கும்போது எழுதலாமா?’ என்று சொன்ஞர். என் முதற்கதை வெளிவந்த அன்றுதான். வண்ணுரப் பேட்டையில் குடியிருந்த திரு. டி. கே. சி. அவர்களை, நான், மாறன்’ திருச்சி ஆ, இ, ரே. நாடகாசிரியர் சோமு (இந் நாள் கல்கி ஆசிரியர்) மூவரும் போய்ப் பார்தோம். அதற்கு முன்னதாக நாங்கள் அவர்கள் இல்லம் போன தில்லை. அவ்வாரம் வந்த கதையை, டி. கே.சி. யும் அவர் குமாரர் தீபனும் படித்திருந்தார்கள். நான் எழுதியதாகச் சோமு சொன்னதும், வெகுவாகப் பாராட்டினர்கள். அன்று முதல் எனக்குத் தீபன் அருமை நண்பராகவும், 跨· கே. சி ஆசிரியராகவும் மாறிஞர்கள். தமிழ் உலகம் போற்றும், புகழும் வட்டத் தொட்டி'யில் 'சுகி யென்ற சிறு தோணிக்கும் இடம் கிடைத்தது. x --