பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. ரீ. ரீ. உமா ஆசிரியர் என் முதல் கதையைப்பற்றி எழுதச் சொன்ஞர். காக்கைச் சிறகினிலே கண்ணனுடைய கரு மையைக் கண்டு களித்த கவியைப்போல, என் நெஞ்சம் என் கதைகளின் கதையிலே திரிந்துகொண்டு, முதல் கதை யைத் தேடி ஒடி இன்புற்றது. "தற்கொக்ைகு மிகவும் எளிய வழி ஒன்று இருக்கிறது’ என்று வியாசர் ஒரு தடவை அர்ஜூனனிடம் சொன்ன prfrif. “அது என்ன?’ என்று கேட்டான் அர்ஜுனன். “நிறைந்த சபைதனிலே உன்னைப் பற்றியும் உன்னு டைய நற்குணங்களைப் பற்றியும் வீரதீர பராக்கிரமங் களைப் பற்றியும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிரு: போதும்!” என்று வியாசர் சொன் ஞராம். - - ஆனல், இப்படி நடந்தது மகாபாரத காலத்திலே. இப்பொழுது ஒருவருடைய தமுக்கை மற்றவர் அடித்துக் கொள்ள வேண்டிய நிலை வந்திருக்கிறது. அதனல்தான் உமா ஆசிரியர் சொல்கிரு.ர். அப்பனே, உன் முதல் கதை எது? அந்த டமாரத்தை இப்படிக்கொண்டு வந்து ‘டம டம வென்று அடி!' என்று.