பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 6 : 2 குயில் தானகப் பாடுகிறது; மயில் தானுக ஆடுகிறது: ஆறு தானகப் பாய்கிறது: தென்றல் தாகை வீசுகிறது. ஆயினும் இவையனைத்துக்கும் ஒரு தூண்டுதல் வேண்டும். இளவேனில், மேக மண்டலம், மாமலை, தென்திசை.இப் படிப் பல. இவற்றின் இயக்கத்துக்குக் காரணமாகின்றன, அதுபோலவே கதை எழுதவும் ஒரு தூண்டுதல், ஒர் எழுச்சி வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள். உள்ளத்தை உந்தும் உணர்ச்சி, தன்னம்பிக்கையை எழுப் பும் பத்திரிகாசிரியரின் கடிதம், வாசகரின் பாராட்டு, இலக்கிய உலகில் நமக்கு மாறுபட்ட கருத்து உடையவ ருடைய உத்வேகமூட்டும் இகழ்ச்சி-இப்படிப் பல கார ணங்கள் கதை எழுதத் துரண்டுகோலாக அமைகின்றன. ஒவ்வொரு கதையின் கதைக்கும் பின்னுல் இப்படிப் பல சூழ்நிலைகள் குவிந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் எழுத் தாளன் தானே எழுத முடியுமே அல்லாமல், விமரிசகரோ, வாசகரோ கற்பனை செய்துகூட வரைய இயலாது. பிராய் டின் தத்துவத்தைக் கொண்டு வேண்டுமானல் இந்த முயற்சியைச் செய்யலாம், நிற்க, என் கதைகள் ஆரம்பமான காலத்துச் சூழ்நிலையை முதலில் சொல்லுகிறேன். சத்தியம், அஹிம்சை, இரக்கம், எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை, சாத்துவிகம், மனுஷத் தனம், நீதி, கற்பு முதலிய நூற்றுக்கணக்கான கனவுகளில் வளர்ந்த, அல்லது வளர்க்கப்பட்ட நான், அப்பொழுது ஒரு புதிய உலகைக் கண்டேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லொணுத வறுமைக்கு இரையாகி, வாழ்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்த நாள் அது. ஏறக் குறையப் பத்து ஆண்டுகள் நாலாறு துறைகளில் அல்லும் பகலும் உழைத்து, உழைப்புக்குப் போதிய பாராட்டை யும், வாழ்வுக்குப் போதாத ஊதியத்தையும் பெற்று நான் கதிகலங்கிக் கிடந்த காலம் அது. ஓர் அழகிய கனவிலிருந்து