பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆罗 புனைபெயரும் முதல் கதையும் அப்பொழுதுதான் விழிப்புற்று, மனிதன் என்று சொல்லப் படும் பிராணியினுடைய கோர வினைகளைக் கண்டேன். ஏராளமான தருமங்களும் தானங்களும் செய்வதாகப் பாசாங்கு செய்துகொண்டு கறுப்புச் சந்தையில் பண்டங் களே விற்ற வியாபாரிகளைக் கண்டேன்: தருமம், அதருமம்; நீதி, அநீதி; சொர்க்கம், நரகம்; கற்பு, விபசாரம் என் பவை போன்ற பழைய உண்மைகள் யாவும் இந்த உலகில் து.ாள் தூளாயின. ஆத்மா வேறு, உடல் வேறு: இம்மை வேறு, மறுமை வேறு; சமூகம் வேறு, தனிமனிதன் வேறு என்ற வேற்றுமைத் தளைகள் படபடவென்து அறுந்தன. மனிதனுடைய ஆசை இமயத்துக்குமேல் ஓங்கியது: அகங் காரம் பூலோக.புவர்லோக-ஸ்-வர்லோகங்களைக் கடந்து கடந்து மேலே எழும்பியது: குவி, குவி' என்ற வேட்கை, கடலாழத்தோடு போட்டியிட்டது. தேவர்களுக்கும் தானவர்களுக்கும் மூண்டது போர் என்று தொடங்கும் பழங்கதைகள் யாவும் இந்தக் காலத்துக் கதைக்கு நிகரல்ல என்று தோன்றிற்று. அக்கம் பக்கத்தில் நல்ல எண்ணத் தைக் காண்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஒருபுறம் லோப மோகங்கள்; மறுபுறம் பீதியும் நடுக்கமும். இப்படி இருந்த அந்தக் காலந்தான், இரண்டாவது உலகப் போர்க் 母醇资}懿。 இப்படி நீதியே தலைகவிழ்ந்துபோன காலத்திலும், நல்ல ஆத்மாக்கள் இல்லாமல் இல்லை. வாழ்வைக் கோயி லாகவும் கலேயைத் தெய்வமாகவும் போற்றி வாழும் மக் கள் எந்தக் காலத்திலும் இருக்கிரு.ர்கள். இந்த நிலையில் நான் கலைமகளை'ப் புகலடைந்தேன். இறைவனின் படைப்பிலே எல்லாப் பொருள்களும் சமமானவை; எல்லாம் பயனுடையவை. இலக்கிய உல கிலே ஆலமரங்களும் தென்னையும் பலாவும் மாவும் உண்டு; என்னைப் போன்ற புற்பூண்டுகளும் உண்டு. சமதரிசிக னான வாசகர்கள் என்னையும் ஆதரித்தார்கள்.