பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 等多 3 என் முதல் கதை-மழையிடையே மின்னல். இது 1942-ல் கலைமகளில் வெளிவந்தது. நீலமாளிகை என்ற என் முதல் கதைத் தொகுதியில் முதல் கதையாக விளங்கு கிறது. இந்தத் தொகுதிக்கு முன்னுரை அளித்த புதுமைப் பித்தன்', "இவருடைய சொந்தக் கற்பனைகள் எல்லாம், முக்கால்வாசிப் பேர் திரை போட்டு மறைத்து வைக்க வேண்டியவை என்று சொல்லும் விவகாரங்களைப் பற்றி அமைந்திருக்கின்றன. அவைகளைப் பற்றி இவர் தெம்பு குன்ருமல், கை தழுதழுக்காமல் எழுதக்கூடியவர் என் பதை இவர் கதைகளே சொல்லும் என்று குறிப்பிட் 红一f了厅。 4 ‘மழையிடையே மின்னல்-வெளியுலகில் மயக்கமுறும் இளைஞன் ஒருவன், தன் மனைவியின் அன்பை விளக்கமாகக் கண்ட வரலாறு அது. எனக்கு அக்கம் பக்கத்தில் இருந்த உலகில் நான் கண்ட காட்சிகளின் சித்திரந்தான் அது. இவரது கதை கள் வாழ்க்கையை ஒட்டியவை; எங்கும் நிகழாதவற்றை யும் நிகழ முடியாதவற்றையும் எழுதிப் படிப்பவருக்குப் போதை ஊட்டி மயக்கும் நோக்கம் ஆசிரியர்க்கு இல்லை’ என்று பேராசிரியர் மு. வ. புகன்றிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.