பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 வி. எஸ். ராமையா இருபத்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இப் போது அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போது எழும் உணர்ச்சிகள் மிக மிக விந்தையானவையாக இருக்கின்றன. அப்போது, அதாவது, 1933-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத் தில் தான் முழுக்க முழுக்க எழுத்தாளனல்ல. எனக்கு எழுத வரும், நான் எழுதுவதற்கு ஒரு மதிப்பு உண்டாகும் என்பது எனக்குத் தெரியாது. அதற்கு முன், தொள்ளா பிரத்து இருபத்து நாலில் ஒரு நாவல் எழுதினேன். அந்த நாட்களில் பிரபலமாக இருந்த ரங்கராஜு, வடுவூர் துரை சாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதவியார் போன்ற வர்களின் வழிகளைப் பின்பற்றி ஒரு துப்பறியும் நாவல் எழுதினேன். வாழ்க்கை, மனிதன், அவனுடைய மனப் போக்குகள், உணர்ச்சிகள் ஆகியவை பற்றி ஒன்றுமே தெரி யாது. அவற்றைப் பற்றிச் சிந்தித்ததும் இல்லை. இருந்தும் நான் நாவல் எழுதிவிட்டேன். அது அச்சும் ஏறிவிட்டது. பின்னர், 1932-ல் இன்ளுெரு விதமான நாவல் எழுதி னேன். அதில் பாதிதான் வெளிச் சரக்கு. அதாவது, நான் படித்திருந்த மண் மட்ட நாவல்களின் போலிக் கற்பனைச் சரக்குகளை மாதிரி வைத்துக் கொண்டு, எனக்குத் தானகத் தோன்றிய கருத்துகளையும் கலந்து எழுதியது.