பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 6岳 அதை எழுதியபோது அது புத்தகமாக வெளிவர வேண் டும், அதற்கு யாருடைய உதவியை யாவது நாடவேண்டும் என்பதுதான் என் எண்ணம். அது தொடர் கதையாகப் பத்திரிகைகளில் வெளிவர முடியும் என்பது எனக்குத் தெரியவே தெரியாது! நான் பத்திரிகைகள் படிப்பதுண்டு. அப்போது நாட் டில் மூண்டிருந்த அறிவுத் தாகம் என்னையும் பற்றியிருந்தது. 'ஆனந்த விகடன்' பத்திரிகையில், கல்கி தமிழ் எழுத் திலும், சிந்தனையிலும் கீயர் மாற்றி வேகத்தை முடுக்கி விட்டுக்கொண்டிருந்த நேரம் அது. தமிழ் நாடு முழுவதின் உள்ளத்தை வளைத்துப் பிடித்துக் கொள்ளும் பேளுவை ஒட்டிக்கொண்டிருந்த கல்கி' என்னையும் வளைத்துப் பிடித் திருந்தார். விகடனே’ப் படிப்பேன். சுதேசமித்திரன்' வாரப் பதிப்பும் என் சுவையைத் துாண்டிக் கொண்டிருந் தது ஓர் அளவுக்கு. இருந்தாலும், நான் எழுதிய கதை யைப் பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடுவார்கள் என்ற எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. அந்தச் சமயம் என் அறையில் மங்களுரைச் சேர்ந்த மாதவராவ் என்ற சட்டக் கல்லூரி மாணவர் உடன் வசித் தார். அவர் வந்து என்னிடம், "நீ எழுதிய கதையை ஏதா வது பத்திரிகையில் கொடுத்துப் பாரேன்” என்ருர். எழுதி முடித்து ஆறு மாதம் உறங்கிக்கொண்டு கிடந்த கதையை - மித்திரன்' காரியாலயத்திற்குக் கொண்டு போனேன். என்ன ஆச்சரியம்! சரியாக எட்டாவது நாள் அதை :மித்திரன்’ வாரப் பதிப்பில் தொடர் கதையாக வெளி யிட எடுத்துக்கொண்டு விட்டதாகச் சொன்னர்கள்! ஆனல், அந்த அதிசயங்கூட என் உள்ளத்தில் நான் எழுத்தாளணுக முடியும் என்ற கருத்தைத் தோற்றுவிக்க வில்லே. அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்துத்தான் அது நேர்ந்தது. - - அந்த ஆண்டில்தான் 'ஆனந்த விகடனி'ல் முதல் முதலாகத் தமிழில் சிறுகதைப்போட்டி நடத்தினர்கள்.