பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金6 புனே பெயரும் முதல் கதையும் நானும் போட்டியைப் பற்றிப் படித்தேன். ஆனல் நானும் எழுத முடியும். எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேயில்லை. அப்போது நான் சுதந்தரச்சங்கு' காரியால யத்திற்கு அடிக்கடி போவேன் வாயாடுவேன். ஒரு நாள் சங்கு-ஸ்-ப்ரஹ்மணியம் என்னிடம், "சும்மாப் பேசு கிருயே? விகடன் போட்டிக்குக் கதை எழுதேன்' என்ருர், நான், என்ன பிரமாதம்? எழுதுகிறேன், பாருங்கள்!" என்று சொல்லிவிட்டு வந்தேன். அவருடைய சவாலேயும், என் விருப்பான பதிலேயும் கூட மறந்து விட்டேன். பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி கும்பகோணம் மகா மகத்துக்குப் புறப்படுவதாக இருந்தேன். அன்று காலேயில் என்னுடன் ஒரே அறையில் வசித்த கே.எஸ். ராமச்சந்திரன் (இப்போது டில்லியில் பி. டி. ஐ. நிருபராக இருப்பவர்) :சங்கு சுப்பிரமணியத்திடம் ‘விகடனு’க்குக் கதை எழுதப் போவதாக விருப்புப் பேசிவிட்டு வந்தாயே? எப்போது எழுதப் போகிருய்?' என்று கேட்டார். நான், "இதோ, எழுதிவிட்டே ஊருக்குப் புறப்படுகிறேன்' என்று காகி தத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட் டேன். - சானுப்பாட்டி வளர்த்த செல்லமும், ராமதாஸும் ஒருவர் மேல் ஒருவர் ஆசை வைத்தும், அதன் பலனைப் பெற இயலாமல் இரு உள்ளங்களும் கருகியதைப் பற்றிக் கதை எழுதுவது என்று தீர்மானித்து, சானுப்பாட்டி சோறு பிசைந்து குழந்தைகளுக்குக் கையில் போடும் காட்சி யுடன் தொடங்கிவிட்டேன். என்னிடம் இயல்பாக அமைந்திருந்த கற்பனை விழித்துக் கொண்டுவிட்டது. அது காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் கண்ணெதிரில் ஒட்டிக் காட்டியது. அவற்றை நான் தாளில் இறக்கினேன். கதைக்கு மலரும் மணமும்” என்று பெயர் வைத்து என் தம்பியிடம் கொடுத்து, இதை ஆனந்த விகடன் ஆபீசில் சேர்த்துவிடு' என்றேன். அன்றிரவு நான் கும்பகோணத் திற்கும் புறப்பட்டுவிட்டேன்.