பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சிக் கவிஞர் பாாதிதாசன் ________________________

    14. திகைப்பு


 கவிஞருக்குப் பலரைத் தெரியாது-ஞாபகம் இருக்காது என்று கூறியிருக்கிேறன் அல்லவா?. அதில் ஒரு சுவாரஸ்யமான 

நிகழ்ச்சியைப் பாருங்கள்.நிரம்ப வேடிக்கையானது.

 கவிஞர் இருக்கும் இடத்திற்கு ரசிகர்களில் ஒருவர் யாரேனும் வருவார். வந்தவர் கைகூப்பி மரியாதை செலுத்திவிட்டு உட்காருவார். கவிஞரும் பதில் மரியாதை செய்வார். 'வந்தவர் யார்?....பெயரென்ன.........?என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விடுவார் கவிஞர். யோசித்தும் புலப்படாது; "நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?’என்பார் கவிஞர். "இப்பொழுதுதான் வந்தேன்?” என்பார் வந்தவர்; "எங்கே இருந்து வருகிறீர்கள்?" என்பார் கவிஞர்; "நேராகப் பஸ் ஸ்டாண்டிலிருந்துதான் வருகிறேன்” என்பார் வந்தவர்.
 இந்தமாதிரி கேள்விகளாவது ஊரைத் தெரிந்து ஒருவாறு ஆளைத் தெரிந்து கொண்டுவிடலாம் என்பது கவிஞர் எண்ணம். வந்தவரோ மிகுந்த மரியாதையுடன் கேட்கும் கேள்விகளுக்குச் சுருக்கமாக (எதிர்பார்ப்பதை விட்டு விட்டு)ப் பதிலளிப்பார்.மேலும் சாமளித்துக் கொண்டு, "இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்பார் கவிஞர். "நான் சும்மாதான் இருக்கிறேன்" என்பார் வந்தவர். இந்தக் கேள்வியிலும் கவிஞர் எண்ணம்
          24