பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

கது. அப்போது எல்லாம் பொதுவுடைமைக் கொள்கை என்றால், அரசாங்கத்தாருக்கு மிகமிக அச்சம் அனைவருக்கும் தெரியும். அக்காலத்தில் கவிஞர் பாடல்களின் தொகுப்பே பாரதிதாசன் கவிதைகள், என்ற நூலாகும்.


பாரதிதாசன் கவிதைகளில் புரட்சிப் பாடல்களில் எவை? இதோ இருக்கின்ற பாடல்களைப் பாருங்கள்


புதியதோர் உலகம் செய்வோம்-செட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய). 1.


1.பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம். (புதிய)

2.இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)

3.உணர்வெலாம் கனலிடை அயர்வினை எரிப்போம் - ஒரு பொருள் தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய) 4.


4.இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் - ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம். (புதிய)


இப் பாடல்கள் அக்காலத்தில் எழுதியது இன்றையப்போர் நிலை கண்டு எழுதியது அல்ல. மற்றும், -


(1) சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள் தாங்கி நடைபெற்றுவரும் சண்டை உலகிதனை

ஊதையினில் துரும்பைப்போல் அலக்கழிப்போம்;பின்னர் ஒழித்திடுவோம்;புதியதோர் உலகம் செய்வோம்.