பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. வாழ்க்கை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் புதுவையில் பிறந்தார். புதுச்சேரியில் வணிகரா யிருந்த கனகசபை முதலியார், கவிஞரின் தந்தையாவார். கவிஞரின் இயற்பெயர் சுப்புரத்தினம்.

சுப்புரத்தினம் சிறுவயதிலேயே, பிரெஞ்சு மொழி பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப்பள்ளியில் பயின்ற காலமே அதிகம். தமது பதினாறாம் ஆண்டில் கல்வே கல்லூரியில் தமிழ் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். இயல்பால் தாய் மொழிப்பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேறினார். பதினெட்டு வயதிலேயே கவிஞரின் சிறப்புணர்ந்த அரசியலார், அவரை அரசியல் கல்லூரித் தமிழ் ஆசிரியராக்கினார்.

இளமையிலேயே, இயலுடன் இசையும் நாடகமும் அவரைத் தழுவி நின்றன. கவிஞரின் இசை இனிமையில் ஈடுபட்டோர், பள்ளி நாடகங்களில் அவரை முக்கிய நடிகராக்கி மகிழ்ந்தனர்.

முத்தமிழ் மன்னராக விளங்குவதற்குரிய அறிகுறிகள் இளமையிலேயே அவரிடம் காணப்பட்டன.

மொழியறிவும், இசையுணர்வும், திட எண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறுவயதிலேயே, சிறு சிறு பாடல்கள் அழ-


7