பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்



காகச் சுவையுடன் எழுதிக் தம் தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். அதில் அதிகமான இன்பத்தை அடைவார்.

ஒரு நண்பருக்குத் திருமணம் நடந்தது; விருந்துகள் நடைபெற்றபின், பாரதியாரின் நாட்டுப் பாடலைக் கவிஞர் கம்பீரமாகப் பாடி னார். பாரதியாரும் அந்த விருந்தில் கலந்திருந்தார். பாரதியார் அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பதை தம் கவிஞர் அறியமாட்டார். அந்தப் பாடலே அவரைப் பாரதியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

"சுப்புரத்தினம் ஒர் கவி-அதற்குரிய தன்மை அவரிடம் உண்டு" என்ற எண்ணம் அவரைப் பார்த்தபொழுதே பாரதியாருக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஒர் நாள் பல நண்பர்களிடையே, இதைத் தெரிவிக்க விழைந்த பாரதியார், "சுப்புரத்தினம் கவி இயற்ற வல்லவன்” என்று கூற, 'எங்கே எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம்' என்று நண்பர்கள் கேட்க, 'பாடு' என்று பாரதியார் சொல்ல, "எங்கெங்குக் காணினும் சக்தியட" என்ற பதினாறு வரி கொண்ட இரண்டடிகளைப் பாடினார். அந்தப் பாட்டின் அழகும்பொருளும் அவரைப் பாரதிதாசன் என்று தமிழகத்திற்கு உணர்த்தின. வேறு யாரும் பெறாத மதிப்பை-பாராட்டை -புகழை ஆசீர்வாதத்தைப் பாரதியாரிடம் பாரதிதாசன் பெற்றார் கவிஞன் என்ற சிறப்பால்!

கனக-சுப்புரத்தினத்தின் முதற்பாட்டு பாரதியாராலேயே, ஶ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்


8