பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மெழுகும் ஆப்பிகண் கலுழ் ரோனே." சானத்தால் மெழுக வேண்டி, அதற்குத் தன் கண்ணிரையே தண்ணிராகக் கொண்டு மெழுகினாள் என்று காட்டுகின்றது. அவள் படும் துன்பத்தைப் பார்த்த மற்றப் பெண்கள் கணவனை இழந்தபின் இக்கொடுமைக்கு ஆளாவதைவிட அவனுடன் உயிர் துறக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பர். இதனால் கணவன் இறந்ததும் அவனுடன் உடன்கட்டை ஏறி இருப்பர். இவ்வாறுதான் உடன் கட்டை ஏறும் வழக்கம் தோன்றி இருக்க வேண்டும். மேலும், கோப்பெரும்பெண்டு கூறுவதாக அமைந்த :பல்சான்றிரே' பல்சான்றிரே? என்ற பாடல் (புறம்.246) கணவனை இழந்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பட்டிய லிட்டுக் காட்டுகின்றது. இடைக்காலத்தில் இஃது அறமாகக் கொள்ளப்பட்டுக் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று என்றாக்கப்பட்டதை, காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர் ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையுள் நளியெரி புகுவர் களியெரி புகாராயின் அன்பரொடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடன் படுவர் பத்தினிப் பெண்டிர் எனவரும் மணிமேகலை அடிகள் உணர்த்துகின்றன. இக் கொடுமை கிட்டத்தட்ட ஆங்கிலேயர் வரும் வரையில் இருந்தது. அவர்கள் வந்ததாலும், இராஜாராம் மோகன்ராய் போன்ற தேசத் தலைவர்களின் போராட்டத் தாலும் இப்பழக்கம் சட்ட அடிப்படையாக நீக்க வழிகோலப்பட்டது. சட்டம் இயற்றினாலும் نیٹ (انگے۔( எளிதாக நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில்தான் பாவேந்தர் தோன்றி அதன் கொடுமைகளை எடுத்துக்கூறி