பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 301 சமைத்து மாதொருபாகனாக இறைவனை முதன் முதலில் உண்டாக்கினர் என்பார், திரு. வி. கலியாணசுந்தரனார். '" பின்பு மக்கள் அவரவர் தேவைகளுக்கு ஏற்பக் கடவுளின் உருவங்களைச் சமைத்துக் கொண்டனர். அவ்வாறு எழுந்த கடவுள்களைத் தொல்காப்பியமும் குறிக்கின்றது. மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்' என்று நான்கு கடவுள்களைக் குறிக்கின்றார் தொல் காப்பியனார். மேலும் கொற்றவை’ என்ற பெண்பாற் கடவுளையும் கூறுகின்றார். இவற்றின் உருவம் எவ்வாறு இருந்தன என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் சங்க காலத்தில் உருவ வழிபாடு வந்துவிட்டமையை நீல மணி மிடற்றோன்" என்ற தொடர் உணர்த்துகின்றது. இவ்வாறு உருவ வழிபாடு தோன்றி வளர்ந்தது. கடவுள் மறுப்பு ஏற்படக் காரணம் மனிதனின் மனஅமைதியை முன்னிட்டுக் கடவுள் வழிபாடு தோன்றியது. மனத்தை எளியமுறையில் விரைவில் ஒருமுகப்படுத்த உருவ வழிபாடு தோன்றியது. சாதியும் மதமும் கடவுள் கொள்கையில் புகத்தொடங்கிய பின், மனித மனத்தில் இருந்து அமைதி மறையத் தொடங்கியது. இதனால் மக்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து தத்தின் பெயரிலும் சாதியின் பெயரிலும் போரிட்டு பாய்ந்தனர். இந்நிலையில் கடவுட் கொள்கைதான் அமைதியின்மைக்குக் காரணம் என்று சிலர் எண்ணத் தொடங்கினர். தமிழ்நாட்டில் இத்தகைய எண்ணத்திற்கு முதன்முதலில் வித்திட்டவர்கள் சித்தர்களே. இவர்கள் கடவுள் கொள்கையை மறுக்காமல் உருவ வழிபாட்டை பட்டுமே மறுத்தனர். இவர்கள் எதிர்ப்பையும் மீறி உருவ வழிபாடு மக்களிடம் பரவியது. இதனால், சமயம்,