பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 307 என்பதால் எதையும் நீ கம்பிவிடாதே பின்பற்று வதால் நன்மை இல்லை ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர் இனிய பேச்சாளர் என்பதற்காக எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல் ! ஒருவர் சொன்னதை உடன் ஆராய்ந்துபார் அதனை அறிவினால் சீர் தூக்கிப் பார் அறிவினை உணர்வினால் ஆய்க! சரி எனில் அதனால் உனக்கும் அனைவருக்கும் நன்மை உண்டெனில் நம்ப வேண்டும் அதையே அயராது பின்பற்றி ஒழுகு! இவ்வுண்மைகளை ஏற்று நீ நடந்தால் மூடப்பழக்கம் ஒழியும் சமயப் பொய்கள் அறிவி னாற் சாகும். - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, பக். 137-38 பாவேந்தரின் கடவுள் கொள்கை பாவேந்தர் முழுக்க முழுக்கக் கடவுள் மறுப்புக் கொள்கையாளர் இல்லை. கடவுளின் பெயரால் நடத்தப் பெறும் அட்டுழியங்களையே சாடுகின்றார். ஊருக்கொரு கோயில், ஆளுக்கொரு கடவுள், ஊருக்கொரு மதம் ஆளுக்கொரு சாதி என்பனவற்றையே கடிகின்றார். அவற்றால் வரும் துன்பங்கள் பல. எனவே சாதிமத வேறு பாட்டைத் தாண்டி ஒன்றே குலம் ஒருவனே தேவன். என்ற திருமூலரின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றார். இக்கோட்பாட்டை ஏற்காததால் நாம் பிளவுபட்டுத் துன்பம் அடைகின்றோம் என்கின்றார். ஒன்றே அல்லால் குலமில்லை ஒருவ னல்லால் தெய்வமில்லை