உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புரட்சியாளர் பெரியார் ஆதலால் நாம் அவர் முயற்சிக்கு எந்தவித இடையூறும் செய்யக் கூடாது' என்று தெளிவுபடுத்தி அனுப்பினார். மறைமலை யடிகளாருக்கு ஏற்பட்ட தெளிவு, மற்ற தமிழர்களுக்கும் ஏற்பட் டிருந்தால், சாதி ஏற்றத்தாழ்வு பழங்கதையாகியிருக்கும். ஈ. வே. ராமசாமியார் நடத்திவந்த 'குடி அரசு' இதழ் இலட்சக் கணக்கிலோ, பல்லாயிரக் கணக்கிலோ விற்பனையான இதழ் அல்ல. பத்தாயிரமே விற்பனை. அதை வாங்கிப் படிப்போரைக் கண்டால்? பொதுச் சமுதாயம் உறுமும்; மேட்டுக் குடியினரோ? தொழுநோயரைப் பார்ப்பதுபோல் வெறுப்புப் வீசுவார்கள். இருப்பினும் அது வல்லமைமிக்க போர்வாளாகப் பயன்பட்டது. பார்வையை அப்போர்வாள் எவருக்குப் பயன்பட்டது? நலிந்தோர்க்கெல் லாம் பயன்பட்டது. நாதியற்றவர்க்கெல்லாம் பயன்பட்டது. இந்நூற்றாண்டின் இருபதுகளிலும், முப்பதுகளிலும் எங்கே, எவர், கொடுமைக்கு ஆளானாலும் அத்தகையோர்க்குப் புகலிடம் 'குடி அரசு'ம் அன்றைய நீதிக் கட்சியின் நாளிதழான திரா விட'னுமே. பிற்காலத்தில் 'விடுதலை' அப்பணியை திறம்படவும் வெற்றிகரமாகவும் ஆற்றிவந்தது; வருகிறது. பிற செய்தித் தாள்கள் வெளியிடத் துணியாத, விரும்பாத, இருட்டடிப்புச் செய்த செய்திகளை இப்பத்திரிகைகளில் காணலாம். கவர்ச்சி யானவற்றை, விளம்பிப் பிழைக்கவில்லை இவ்விதழ்கள். மாறாக, கொடுமைகளை ஊரறியச் செய்து, மக்களிடையே புத்துணர்வை, வளர்த்தன இவை, 'குடி அரசு' அம்பலப்படுத்திய செய்திகள் பல. தீண்டாமை ஒழிப்புப் பணி சான்றாக 286-1925 'குடி அர'சின் தலையங்கம் தீண்டாமையை இவ்வாறு இடித்துரைத்தது: 'பறையன், சக்கிலி, முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது. பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதை சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக்கின்றான். அழுக்குடை தரிக்கிறான். அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது. அவன் ஆகாரத் திற்கு மாட்டு மாமிசம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் "கள்" உற்பத்தி செய்கிறார்கள் என இத்தனைக் குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்ளுவோம். இதற்கு யார் பொறுப்பாளியென்று யோசியுங்கள். 'அவர்களை நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது, குளிக்கவோ வேஷ்டி துவைக்கவோ வழி