உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குடி அரசு' இதழ். . ... 87 'நமது நாட்டில், உயர்வு தாழ்வு, என்ற ஆணவம் மிகுந்திருக் கின்றது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். "குடி அரசு" வின் கருத்தும் அதுவேயென நான் அறிந்துகொண் டேன். சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் அழிக்கவேண்டும். இவை "குடி அர"சின் முதல் கொள்கையாய் விளங்கவேண்டும். இப்பத்திரிகையில் திரு. நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ, அவ்வளவு எனக்கும் உண்டு' என்று வெளிப்படை யாகவே வழிகாட்டினார். ஞானியார் சுவாமிகளுக்கு சீடர்கள் ஏராளம். அவரால் உருவான தமிழ்ப் புலவர் பலர் ஆவார். இவர்கள் அனைவரும் தங்கள் குருநாதருடைய குறிப்புகளை ஏற்று, உயர்வு தாழ்வு ஒழிப்பிற்கும் சமயத்தில் உள்ள கேடுகளைப் போக்கவும் முயன் றிருந்தால், தமிழ் மக்களிடையே ஒற்றுமை வளர்ந்திருக்கும். அடிகளாரைக் கும்பிடக் கூசாதவர்கள், பின்பற்றுவதில் போதிய அளவு முன்னே நிற்கவில்லை. எனவே 'குடி அரசு' எதிர்ப்புகளுக் கிடையில் வளரவேண்டியதாயிற்று. இருந்தால் என்ன? ஈ. வே. ராமசாமி, கைவல்ய சாமியார், சந்திரசேகர பாவலர், கோவை அய்யாமுத்து, சாமி சிதம்பரனார், சாத்தான்குளம் ராகவன், சு.குருசாமி போன்றவர்களின் ஆணித்தரமான எழுத்துக்கள், அதைப் பசுமையாகவும் பயனுள்ள வகையிலும் வளர்த்தன. அக்காலக் 'குடி அரசு' இராமாயண ஆராய்ச்சி, பெரிய புராண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி, முதலியவைபற்றி சிறந்த கட்டுரை களை வெளியிட்டது. இவை பொதுமக்களின் சிந்தனையைத் தூண்டின. பழைமை விரும்பிகள், அக்கட்டுரைகளைப் படித்து அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு காலகட்டத்தில் தன்மான இயக் கத்தை எதிர்த்து ஒழிக்கவேண்டுமென்று பதைபதைத்தார்கள். அத்தகையோர் சிலர், மறைமலை அடிகளாரை அணுகினர். சைவத் தைப் பாதுகாக்கும்பொருட்டு, தன்மான இயக்கத்தை எதிர்த்தாக வேண்டுமென்றனர். அதை மறைமலை அடிகளார் முன்னின்று நடத்த அழைத்தனர். அடிகளார் தெளிந்த அறிவுடைய தமிழ் மலை. தமிழர்கள் சூத்திரர்கள் அல்ல என்று எடுத்துக்காட்டிய சைவத் தலைவர். தனித் தமிழ் வளர்ச்சியில், மக்கள் சமத்துவத்தில், நாட்டங் கொண்டிருந்தவர். எனவே அடிகளார், 'சைவம் போனாலும் போகட்டும். பிறகு உயிர்ப்பித்துக்கொள்ளலாம்; ஆனால் நம் நாட்டைப் பிடித்திருக்கும் பார்ப்பனீய தொழுநோயை அடியோடு ஒழிப்பதென்றால் அந்த வேலை இந்த நாயக்கர் தவிர வேறு யாராலும் முடியாது.