'குடி அரசு' இதழ்.. ... 91 மலிவான ஒப்பந்தக் கூலிகளாக, பிஜி, தென்னாப்பிரிக்கா, மோரிஸ் தீவுகள், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு, கப்பலேற்றி அனுப்பின. பல இலட்சக்கணக்கான நம் மக்கள், கொத்தடிமை களாகப் போன தற்குக் காரணம் வறுமை மட்டுமல்ல; கொடுமை யும் ஆகும். நம் நாட்டில் சாதியின் பேரால் கோடிக்கணக்கானவர் களை, ஊர்க் கோடிகளில், எவ்வித வசதியுமில்லாத குடியிருப்பு களில் வைத்து சித்திரவதை செய்ததும் பெரும் காரணமாகும். எனவே, தாழ்த்தப்பட்டவர்களும் பின்தங்கிய வகுப்பார்களுமே பெருமளவு வெளியேறினார்கள். அவர்களில் சிலரை, வீட்டு நினைப்பும், நாட்டு நினைப்பும் விட்ட பாடு இல்லை. எனவே, அப்போதைக்கப்போது, சிலர் தாயகம் வந்துபோவது உண்டு. அப்படி வரும்போது, வளத்தோடு வந்தாலும் அவர்களுக்குப் பழைய கொடுமைகள் காத்திருக்கும். தீண்டப்படாதவர்களாகவே, சட்டையணியக்கூடாதவர்களாகவே, செருப்பு போடக்கூடாதவர் களாகவே நடந்துகொள்ளவேண்டும். வெளி நாட்டு பழக்கக் கொடுமையால், சொக்காய் அணிந்தோ, செருப்பு போட்டுக் கொண்டோ வெளியே வந்தால், அடியும் உதையும் காத்திருக்கும். அக்காலத்தில் இது எல்லா ஊர்களிலும் நடந்த அநீதிகள். 26-4-31 நாளிட்ட ‘குடி அர’சில் ' எங்களின் கதி இதே கதிதானா?' என்ற தலைப்பில், 'பொட்டைக் கோட்டை கிராமத்து தாழ்த்தப் பட்டவர்களின் கண்ணீர் கடிதம்' என்ற துணைத் தலைப்பில் ஒரு வேதனைச் செய்தி வெளியாயிற்று. அதைப் படியுங்கள். 'படிக்கத் தெரியாத எங்கள் தலைமைக்காரர்கள், நினைத்ததே சட்டம். மலேயாவிலிருந்து திரும்பினால், பனை மரத்தில் கட்டி அடிக்கிறார்கள். பொட்டைக் கோட்டை இலவசப் பள்ளியிலும் கொடுமை. கல்வி இலாகா கவனிப்பதில்லை.' 24-4-32 நாளைய 'குடி அரசு' வெளியிட்ட 'இழிவுச் செய்தி' இதோ: பச்சப்பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர், ஆதி திராவிடர், திரு. என். பெரியதம்பி 21-4-32 காலை 11 மணிக்கு சித்திரச்சாவடி மோட்டார் நிற்கும் இடத்திற்கு தன் பெண்சாதி, பிள்ளைகள் நான்குடன் சென்று, எஸ். 579 பி. எஸ். 210 நெம்ப ருள்ள காரில், காடையாம்பட்டி போக, ஒரு மணி உட்கார்ந்திருந் தார். ஒரு மணி கழித்து வண்டி புறப்படும்போது, அவருடைய சாதியை விசாரித்து, 'பறையனுக்குக் கார் வேண்டுமா? நடந்து போடா' என்று அவமானமாகப் பேசி, இறக்கப்பட்டனர். இப்படி, பெரிய தம்பியே எழுதியுள்ளார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/103
Appearance