உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புரட்சியாளர் பெரியார் ஊர்திகளில் சாதிக் கொடுமை முன்பெல்லாம் எல்லாப் பேருந்து வண்டிகளும் தனியார் துறையில் ஓடின. அவை, அந்தந்த மாவட்ட ஆட்சிக் குழுக்க ளிடம் 'லைசென்ஸ்' பெறவேண்டும். சுயமரியாதைச் சுடர், திரு. சௌந்தரபாண்டியன், சில காலம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் குழுவின் தலைவராகத் தொண்டாற்றினார். அப்போது சில பேருந்து அமைப்புகள், வண்டிகளில் பஞ்சமருக்கு இடம் இல்லை' என்று அறிவிப்புகளை எழுதித் தொங்கவிட்டதோடு, பயணச்சீட்டுகளில், அப்படியே அச்சிட்டிருந்தார்கள். இப்படி, மனித உரிமையொன்று பறிக்கப்பட்டது தலைவர் செளந்தர பாண்டியன் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவர் உடனடி யாக நடவடிக்கை, எடுத்தார். பேருந்து அமைப்புகளுக்கு எச்சரிக்கை சுற்றறிவிப்பை அனுப்பினார். குறிப்பிட்ட சாதியார்களை ஏற்றிச் செல்ல மறுக்கும் பேருந்து வண்டிகளுக்கு 'லைசென்ஸ்' ரத்து செய்யப்படுமென்று கண்டிப்பான எச்சரிக்கை விடுத்தார். எச்சரிக்கை பலன் கொடுத்தது. இந்த எச்சரிக்கையை அக்காலக் "குடி அரசு' பெரிய கண்டிப்பான செய்தியாக வெளி யிட்டது. மற்றொரு கொடுமையைப்பற்றிய தகவல்: 'கரூர் தாலுக்காவில் ஓடும் மோட்டார் வண்டிகளில் தாழ்த்தப் பட்ட மக்களை ஏற்றிக்கொண்டு போக மறுப்பதை கோட்டக் குறிச்சி தேவேந்திரகுல வாலிபர் சங்கம் 7-1-35 அன்று கூடி கண்டித்ததோடு, சர்க்காரை உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டது என்ற செய்தி 20-1-35இல் 'குடி அர' சில் வெளியானது. பிற மதத்திலும் சாதிக் கொடுமை சாதி ஏற்றத்தாழ்வு நோய் இந்நாட்டு கிறுத்தவர்களையும் விட்டபாடில்லை. திருநெல்வேலி பகுதியில் கிறுத்தவம் பரவத் தொடங்கியபோது ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், 'பங்குக் குருவாக' நியமிக்கப்பட்டபோது, மற்ற சாதி கிறுத்த வர்கள் எதிர்த்தார்கள். கிறுத்தவ மதத்திற்குப் போனாலும் சாதி இழிவு தொடர் கிறது என்பதற்கு மற்றோர் எடுத்துக்காட்டு: ஈரோட்டில் கிறுத்துவ ஆதி திராவிடர்களை அவர்கள் கிறுத்துவ மேல் சாதிக் காரர்கள் தொழும் இடத்தில் வந்து தொழுததற்காக மேல் சாதிக் காரர்கள் செருப்பால் அடித்துவிட்டதாக கோர்ட்டில் வழக்குத்