98 புரட்சியாளர் பெரியார் ஈ.வே.ரா. புன்முறுவலோடு 'அய்யா சொல்வது புரிகிறது. நான் "குடி அரசை நடத்துவது என்னுடைய புகழையோ செல்வாக் கையோ வளர்த்துக்கொள்ள அல்ல; அதை வைத்துப் பிழைப்பு நடத்தவும் அல்ல. 'தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துக்களைச் சொல்லிப் பதிந்தாகவேண்டும். இன்று ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாளை ஒருநாள் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும். இக் கருத்துக்களைச் சொல்லும் நிலையில் நான்தான் இருக் கிறேன். சொல்லவேண்டிய கருத்துக்களை, நானே எழுதி, நானே அச்சுக் கோத்து, நானே அச்சிட்டு, நானே படித்துக்கொள்ளும் நிலைக்குப் போனாலும் இழப்பைப் பொருட்படுத்தாது “குடி அர " சை வெளியிட்டு, என் கருத்தை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லவேண்டியது என்னுடைய கடமை' பெரியார் பதில் கூறினார். என்று இவ்வாறு கொள்கைப் பிடிப்பால் எவ்வித தன்னலமும் கருதாது கட்டிக் காக்கப்பட்ட 'குடி அரசு' வாயிலாகவும், தன்மான இயக் கத்தின் வழியாகவும் சமூகக் கொடுமைகளை ஒழிப்பதற்கும், குறிப்பாக எல்லோருக்கும் சமநீதி கிடைப்பதற்கும் போராடி வந்த பெரியாரிடம் அக் கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பு, காலத்தின் உந்துதலால், 1938ஆம் ஆண்டு வந்தடைந்தது.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/110
Appearance