உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிக் கட்சி தலைமை முதல் நீதிக் கட்சியின் தோற்றுவாய்பற்றி முன்னரே, அத்தியாயத்தில், பெரியாரின் இளமைப் பருவ அரசியல் சூழலைப் பற்றி விளக்கும்போது குறிப்பிடப்பட்டது. பெரும்பான்மையோர், சிறுபான்மையோருக்குப் பெரிய பதவிகளையும் அலுவல்களையும் இழந்துவிட்டுப் பரிதவித்தனர். சமுதாயத்தின், பழக்க கொடுமை யால் கீழ் சாதிகளாக நடத்தப்பட்டனர். இவ்விரு தீங்குகளையும் உணர்ந்து விழிப்படையத் தொடங்கியபோது அவ்விழிப்பு நீதிக் கட்சியை உருவாக்கிற்று. தோற்றம் சென்னை மாநகரில் படித்து வந்த, விரல் விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனரல்லாத மாணவர்களை ஒன்றுபடுத்தி அவர்களின் நலன்களைப் பேணும் பொருட்டு, டாக்டர் சி. நடேசனார் தோற்றுவித்த திராவிடர் சங்கம்' நீதிக் கட்சிக்கு முன்னோடி ஆகும். 1916ஆம் ஆண்டு டாக்டர் டி. எம். நாயர், திரு. பிட்டி தியாக ராயச் செட்டியார், டாக்டர் நடேசனார் ஆகியோர் கூடி தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' என்னும் பெயரால் ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். இச் சங்கம், பார்ப்பனரல்லா தாருக்கு கல்வியிலும் அலுவல்களிலும் பதவிகளிலும் மக்கள் தொகை விழுக்காட்டில் பங்கு கோரிப் பெறுவதை நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தது. எனவே, மக்கள் வழக்கில் அதை நீதிக் கட்சி என்று எல்லோரும் அழைக்கத் தலைப்பட்டார்கள். இதழ்கள் நீதிக் கட்சியின் பணி, சென்னை மாகாணம் முழுவதும், பரவத் தொடங்கியது. எனவே, கட்சிக் கொள்கைகளை, நோக்கங்களை, திட்டங்களை பொதுமக்களிடையே பரப்பும் பொருட்டு 'ஜஸ்டிஸ்' என்ற ஆங்கில நாளிதழையும், 'திராவிடன்' என்ற தமிழ்