உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிக் கட்சி தலைமை 101 நீதிக் கட்சியின் சார்பில், கடலூர் திரு. ஏ. சுப்பராயுலு ரெட்டியார் முதல் அமைச்சரவையை அமைத்தார். அதில், பின்னர் பனகால் அரசராகப்போகும் ராஜா ராமராயநிங்காரு, திரு. கே. வி. ரெட்டி ஆகிய இருவரும் இடம் பெற்றனர். திரு. ரெட்டியார் உடல் நலக் குறைவினால் 1921ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதலமைச் சர் பதவியை விட்டுவிட்டார். எனவே, ராமராயநிங்காரு முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது, திரு ஏ. பரசுராம பாத்ரோ அமைச்சரானார். அக் கால சட்டசபையில், நீதிக் கட்சி உறுப்பினர்கள், சமுதாயத் தில் மேனிலையில் இருந்தவர்கள். தங்கள் சொந்த பணத்தைச் செலவு செய்து, பொதுத் தொண்டு என்னும் பெருமையைப் பெற்றவர்கள். பாமர மக்கள் எதை விரும்புவார்கள் என்று எண்ணி அதைச் சொல்வதற்குப்பதில், அவர்களை முன்னேற்றும் என்பதை உணர்ந்து, அவற்றை வெளிப்படையாகச் சொல்ல முன்வந்தார்கள். வகுப்புரிமை ஆணைகள் எவை நீதிக் கட்சியின் முதல் அமைச்சரவை, பார்ப்பனரல்லா தார்க்கு வேலை வாய்ப்புகள் பெருகும், முன்னரே கூறியபடி, வகுப்புரிமை ஆணைகளைப் போட்டது. அவை, அரசாங்கத்தின் பதவிகளில், பல நிலைகளில், சமுதாயத்தின் 2.7 விழுக்காட்டினர், 35 முதல் 40 விழுக்காடு வரை பதவிகளைப் பெற்றுக் காத்துக்கொண்டிருந்த அவல நிலையை மாற்றியது. முதன்முதல் வருவாய்த் துறை பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும் போது, பல சாதியாருக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டுமென்று வருவாய்த் துறை வாரியம் நிலையான ஆணை 128 (2) சுற்றறிக்கை அனுப்பியது. பிறகு அரசு ஆணை 613, தேதி 16-9-1921இல் மேற்படிக் கொள்கையை எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தி அலுவல்களில் பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் சனவரி 15-க்கும் சூலை 15-க்கும் முந்திய அரையாண்டில், எத்தனை பார்ப்பனர், பார்ப்பனரல்லா தார், கிறுத்தவர்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலோ-இந்தியர் மற்றும் பிறர் நியமிக்கப்பட்டார்கள் என்று பட்டியல் அனுப்ப வேண்டு மென்றும் அவ்வாணை கட்டளையிட்டது. இருப்பினும் பார்ப்பனரல்லாதாருக்கு 48 விழுக்காடும், பார்ப் பனர்களுக்கு 22 விழுக்காடும் புதுப் பதவிகள் கிடைத்தன. பொது மக்களின் குறை குறையவில்லை.