102 புரட்சியாளர் பெரியார் மீண்டும் 1922 ஆகஸ்ட் 15 நாளிட்ட அரசு ஆணை எண் 658 வெளியிடப்பட்டது. அதன்படி இரு அறிவிப்புகள் அறிவிப்புகள் ஒவ்வோர் அரை ஆண்டும் அனுப்பவேண்டும். 35 முதல் 99 ரூபாய் வரை சம்பளம் உடைய பதவிகளுக்கு நியமன சாதி அறிவிப்பு; 100-க்கு மேற்பட்ட சம்பளமுடைய பதவிகளுக்கு நியமனம் பற்றிய சாதிப் பட்டியல் அனுப்பவேண்டும். அதோடு, தற்காலிக பதவி உயர்வுகளிலும் எல்லோர்க்கும் பதவி என்னும் கொள்கையைக் கருத்தில்கொள்ள வேண்டு மென்பது அரசின் ஆணை. ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டி யிருந்தது? நியமன அதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்ததால், பல பதவிகளுக்கு தற்காலிக உயர்வு அடிப்படையில் நியமித்துவிட்டு, நிலையான பதவி நியமனங்களைக் குறைத்து விட்டார்கள். வகுப்புரிமையின் விளைவைக் குறைத்துவிட்டார்கள். எனவே இவ்வுத்திரவு தேவைப்பட்டது. மேற்கூறிய ஆணைகளும் ஆட்சி முறைகளும் நீதிக் கட்சியின்பால் பொதுமக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை வளர்த்தது. எனவே 1923ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் நீதிக் கட்சியே பெரும் பான்மையான இடங்களைப் பெற்றது. இரண்டாம் முறையாக நீதிக் கட்சி அமைத்த அமைச்சரவைக்கு ராமராயநிங்காருவே முதல் அமைச்சராகத் தொடர்ந்தார். திரு. ஏ. பரசுராம பாத்ரோ அமைச்சராக நீடித்தார். திரு. கே. வி. ரெட்டிக்குப்பதில் திரு. தி.ந.சிவஞானம் பிள்ளை அமைச்சரானார். இரண்டாவது அமைச்சரவை இரண்டாவது அமைச்சரவை 1924ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகச் சட்டத்தை இயற்றியது. முன்னர் குறிப்பிட்ட படி, இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டத்தை 1926ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இச்சட்டம் பரபரப்பான எதிர்ப்புகளைத் தூண்டி யது. அறநிலையக் காவலர்கள், தங்கள் செல்வாக்கு குறைந்து விடும் என்று அஞ்சினார்கள். எனவே, பொதுமக்களிடையே குழப் பத்தை வளர்த்தார்கள். செய்தித்தாள்கள், அக்குழப்பத்திற்குத் துணை நின்றன. கடைசியில், இந்து அறநிலைய வாரியத்தின் முதல் தலைவராக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நடுவர் திரு. டி.சதாசிவ அய்யரை நியமித்ததன்மூலம் ஓரளவு எதிர்ப்பைத் தணித்தார்கள். முழு உரிமையில்லாத இரட்டை ஆட்சி முறையில், எவ்வளவு நன்மைகள் செய்யமுடியுமோ அவ்வளவு நன்மைகளை ஆணை களின் வழி, நீதிக் கட்சியின் அமைச்சரவை செய்தது. நேர்மை
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/114
Appearance