நீதிக் கட்சி தலைமை 103 யைப் பொறுத்தமட்டில், நல்ல பெயரோடு இயங்கினார்கள். இருப்பினும் சில குறைபாடுகள் புக நேர்ந்தது. குறைபாடுகள் நீதிக் கட்சி செய்தித்தாள்களைப் பரவலாக்கத் தவறிவிட்டது. 'நல்லதைச் செய்கிறோம்; நேர்மையாகச் செய்கிறோம். இவை போதும்' என்றெண்ணி கொள்கைப் பரப்பிலும் கவனம் குறையத் தொடங்கியது. ஆட்சியில் இருந்தோரால், ஒருவர் பதவி பெற்றால் ஒன்பதின்மர் முயன்று தோற்றார்கள். அது, எரிச்சல் உடையோர் எண்ணிக்கையை நாள்தோறும் பெருக்கிற்று. பதவி, அதிகாரம், செல்வாக்கு உடையோர்பால், மற்றவர்களுக்கு அழுக்காறு ஏற்படு வது இயற்கை. இது சற்று அதிகமாகவே, விரைவாகவே, நம் சமுதாயத்தில் வளரும். இந்தப் போக்கும் நீதிக் கட்சிக்கு இடை யூறாக வந்தது. இத்தனையும் சேரவும் மக்கள் ஆதரவு குறைந் தது. 1926ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் நீதிக் கட்சி தோற்றது. அதன் தலைவர்கள் தோற்றார்கள். நீதிக் கட்சியின் தொடக்க காலத்தில், பெரியார் அதற்கு தூரத் தில் இருந்தார். காங்கிரசு இயக்கத்தில் அருந்தொண்டு ஆற்றிய போது வகுப்புரிமைக் கொள்கையை முழங்கினாலும் நீதிக் கட்சி அரசியலுக்கு துணை நிற்கவில்லை. 1925ஆம் ஆண்டு, பெரியார். காங்கிரசைவிட்டு விலகிய பிறகே, மேற்கூறிய மூன்றாவது பொதுத் தேர்தல் வந்தது. அப்போதும் பெரியார் தேர் தலிலிருந்து விலகியே நின்றார். ஆனால் நீதிக் கட்சி தோற்றுவிட்டதால், பொதுமக்களின் நன்மைக்கான வகுப்புரிமைக்குத் தீங்கு வரக்கூடும் என்று கருதிய பெரியார் துவண்ட நிலையில் இருந்த நீதிக் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தார். அவர் கொடுத்த ஊக்கம் ஒரு மாநாடாக உருவெடுத்தது. 1926ஆம் ஆண்டு டிசம்பர் 25, 26ஆம் நாட்களில், மதுரையில், மாகாண பார்ப்பனரல்லாதார் மாநாடு கூடிற்று. சர் ஏ. பரசுராம பாத்ரோ தலைமையில் கூடிய அம் மாநாட்டினால், பார்ப்பனரல்லாதார் இயக்கம் புத்துயிர் பெற்றது, மீண்டும் வளர்ந்தது. நீதிக் கட்சியினரும் பெரியாரின் தொண்டை, ஆதரவை நாடினர். அதனால், நீதிக் கட்சிப் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பெரியார் கலந்துகொள்ள தலைப்பட்டார். அதேபோல், தன் மான இயக்க பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் நீதிக் கட்சித் தலைவர்களும் பிறரும் கலந்துகொள்வது பழக்கமாகிவிட் டது. இரு சாராருக்குமிடையே தொடர்புகள் பெருகின; நெருக்க மாயின.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/115
Appearance