104 புரட்சியாளர் பெரியார் வரலாற்றின் திருப்புமுனை தன்மான இயக்கமும் நீதிக் கட்சியும் மேற்கூறியபடி இணைந்து பணிபுரிந்தது, வகுப்புரிமைக் கோட்பாட்டிற்கு வலுவூட்டியது. முன்னர் போட்ட ஆணைகளை முனை மழுங்கும்படி நிர்வாகிகள் செய்துவிட்டார்கள். 'எல்லார்க்கும் பதவி' என்னும் ஆணை எதிர்பார்த்த பலனை முழுமையாகக் கொடுக்கவில்லை. இதைச் சுட்டிக்காட்டி, டாக்டர் சுப்பராயன், திரு. எஸ். முத்தையா, திரு.எம்.ஆர். சேதுரத்தினம் ஆகிய மூவர்கொண்ட அமைச்ச ரவை புதிய, விரிவான, எல்லா வேலைகளையும் உள்ளடக்கும் ஆணை பிறப்பிக்கச் செய்தது. அந்த அரசு ஆணை எண் 1129, நாள் 15-12-28இன்படி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், கிறுத்தவர், இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு உரிய பங்கு திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதிலும், பார்ப் பனர்களுக்கு, மக்கள் தொகை அடிப்படையில் எவ்வளவு உண்டோ அதைப்போல ஆறு மடங்கு ஒதுக்கப்பட்டது. அதாவது பன்னி ரெண்டு பதவிகளில் இரண்டு இடங்கள் பார்ப்பனருக்கு. இந்த ஆணைதான், சமுதாய வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த வகுப்புரிமை ஆணையாகும். . 1928இல் அரசுப் பதவிகளில், வகுப்புவாரி இடம் ஒதுக்கியது சரி பங்காக இல்லை. பார்ப்பனருக்கு நூற்றுக்குப் பதினாறு இடம் கொடுப்பது தவறு. தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பின் தங்கியவர் களுக்கும் அதிக பங்கு ஒதுக்கவேண்டும்' என்ற கோரிக்கை அடிக்கடி எழுந்தது. ஆனால் வகுப்புரிமை அடிப்படையில் பதவிகளுக்குப் பொறுக்கி யெடுக்கவெண்டுமென்னும் அரசு ஆணை இருந்தும் 1937ஆம் ஆண்டு, பொதுப்பணிக்கு ஆள் பொறுக்கும் கழகம், கால்நடை மருத்துவப் பணிக்கு இருபத்தியாறு பேர்களைத் தேர்ந்தெடுத்தது. அதில் பார்ப்பனரல்லா தவர் அய்வருக்கே இடம். முஸ்லீம்களுக்கு ஒன்று,கிறுத்தவர்களுக்கு ஒன்று, யாகப் பரம்பரைக்கு பத்தொன் பது இடங்கள். இத்துறையில்தான் இப்படி என்று எண்ணிவிடா தீர்கள். கல்வியில் ஆதிக்கம் பார்ப்பனரல்லாதார் நடத்திய கல்வி நிலையங்கள் நிலையும் இப்படியே: சென்னை, தொண்டைமண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் 1935ஆம் ஆண்டு வேலை செய்துகொண் டிருந்த, 52 ஆசிரியர்களில் 40 பார்ப்பனர்கள்; 12 பேர்களே மற்ற
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/116
Appearance