142 புரட்சியாளர் பெரியார் செய்து படிக்கவைக்கவேண்டும். வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்கவேண்டும். தாய் தகப்பன்மார் பார்த்து ஒருவனுக்குப் பிடித்துக்கொடுப்பது என்று இல்லாமல் அது வாகவே - பெண்ணாகவே பார்த்து, தகுந்த வயதும் தொழிலும் ஏற்பட்ட பிறகு - ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி செய்யவேண்டும். சுருக்கமாகச் சொன்னால், கன்னிகாதானம், கலியாணம் -தாரா முகூர்த்தம் என்கிற வார்த்தைகளே மறைந்து- அகராதியில்கூட இல்லாமல் ஒழியவேண்டும். அன்றுதான் பெண்கள் சுதந்திரம் அனுபவிக்க இலாயக்குள்ளவர்கள் ஆவார்கள்.' இப்படிப் பெரியார் கூறும்போது பலருக்குக் குமட்டும்; முகம் சுழிக்கும். இருப்பினும் சிந்தித்துப் பாருங்கள். பொருள்களா? பெண்கள் பொம்மைகளா? விளையாட்டுப் நகை தாங்கிகளா? பெண்களைத் தானப் பொருள்களாகக் கருதலாமா? அடிமை வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு அடிமைக் குணம்தானே வரும். உரிமை மக்களின் பிறப்பிடம், உரிமை உணர்வுடைய பெண்களே. பிறருக்கு உபதேசித்தபடி நடந்துகாட்டுவதில் பெரியார் ஈடு இணையற்றவர். பெண்கள் குடும்ப வாழ்க்கையோடு முடங்கிக் கிடக்காமல் நாட்டின், சமுதாயத்தின் பொது வாழ்க்கையிலும் பங்குகொள்ளவேண்டும் என்பது அவரது குறிக்கோள். அதற் கேற்றபடி தன் மனைவி நாகம்மாளும் தங்கை கண்ணம்மாளும் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே பொது வாழ்க்கையில் மட்டுமல்லாது பொதுக் கிளர்ச்சிகளிலும் ஈடுபட ஊக்குவித்தார். இவ்விருவரும் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் பங்குகொண்ட தையும், வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டதையும் இரண்டிலும் வெற்றி பெற்றதையும் முன்னரே கண்டோம். மேலும் திருமதி நாகம்மையார் தம் வாழ்நாள் முழுவதுமே சுயமரியாதை இயக்க மாநாடுகளில் கலந்துகொண்டு, தமிழ் பெண் களுக்கு வழிகாட்டினார். தன்மான இயக்கத்தைத் தாயாக விளங்கி ஆதரித்து வளர்த்தவர், திருமதி நாகம்மையார் என்பது மிகை யன்று. சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் காலத்தில், முன்னணித் தோழர்கள் தங்கள் குடும்பத்தோடு மாநாடுகளில் கலந்துகொள்வது மரபாயிருந்தது. திருமதி நாகம்மையார் பெரியார் ராமசாமிக்கு எல்லா வகையா லும் வாழ்க்கைத் துணையாக இருந்தார். 1929இல் அவரோடு மலேயா நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/154
Appearance